
இன்று தந்தையின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி--அவரின் நினைவும் பிரிவிலும் மீளாமல் கண்ணீர் மலர்களால் சமர்பிக்கும் கவிதாஞ்சலி
அப்பா !
அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்வாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை
மூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்!
ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .
நீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்
அனேக விசயங்களை என் தோழனாய் என் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த தந்தை எனும்
என் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .
காற்றில் கலந்த என் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகிறேன் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும் நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !
என் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்
நடை பயில கற்று கொடுத்த கைகளை !
என்னை தோள்களில் சுமந்த தோள்களை !
குஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்
குடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை !
ஒளி நட்சத்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை என் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது என் மனம் எரிமலையாய் அக்னி
பிழம்பாய்வெடித்து சிதறியது .
என்னை மன்னிப்பீர்களா தந்தையே !
வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்
என்னை மன்னிக்கவும் ,
என்னை விட்டு உடலால் பிரிந்தாலும்
என் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,
|
Tweet |
//முதலாம் ஆண்டு நினைவஞ்சலி//
ReplyDeleteவணக்கம் சக்தி...
கொடுத்து வைத்த தந்தை,...
உங்களை போன்ற மகனை இவ்வுலகிற்கு விட்டு சென்ற நல்லவர்... நீங்களும் அவர் வழியில் செல்ல வாழ்த்துகள்
//முதலாம் ஆண்டு நினைவஞ்சலி//
ReplyDeleteவணக்கம் சக்தி...
கொடுத்து வைத்த தந்தை,...
உங்களை போன்ற மகனை இவ்வுலகிற்கு விட்டு சென்ற நல்லவர்... நீங்களும் அவர் வழியில் செல்ல வாழ்த்துகள்//
ஞானசேகரன் சார்...நீங்களும் அவர் வாழ்ந்துகாட்டிய வழியில் செல்ல வாழ்த்துக்கள் என வரவேண்டும்.
//
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் !
ஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும் நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !
கவலைப்படாதீர்கள் சக்தி சார்..தோள்கொடுக்க நாங்கள் இருக்கின்றோம்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்புள்ள ஞானா ,
ReplyDeleteவணக்கம் ,உங்கள் கருத்து அருமை .கண்டிப்பாக என் தந்தை வகுத்து கொடுத்த வழியில் தான் நான் வாழ்வேன் . ஏனென்றால் அவர் தனக்காக வாழ்க்கை வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர் .பிறர் முகத்தில் சிரிப்பை ரசித்தவர் .பிறர் துக்கத்தில் சுமை தாங்கியாய் தோள் கொடுத்து துணை நின்றவர் .ஒரு தந்தைக்கு இருக்க வேண்டிய உண்மையான முழு தகுதியும் பெற்றிருந்தவர் .அவருக்கு மகனாக பிறந்தது என் பிறவி பயன் .
நட்புடன் ,
கோவை சக்தி
அன்புள்ள வேலன் அண்ணா ,
ReplyDeleteவணக்கம் அண்ணா ,உங்கள் வார்த்தைகள் என் கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டது .
""கவலைப்படாதீர்கள் சக்தி சார்..தோள்கொடுக்க நாங்கள் இருக்கின்றோம்....""
என் தந்தையின் பிரிவை விட இப்படி ஒரு நல்ல அண்ணனான நண்பர் கிடைத்தது என் அதிஷ்டம் .என் வாழ்க்கை வரை நம் நட்பு தொடர வேண்டும் ..
நன்றி அண்ணா ,
நட்புடன்,
கோவை சக்தி
Hi,
ReplyDeleteI don't know the wording to say, anyway your's father blessing always with you.
Still & ever
Mahesh
உங்கள் வருகைக்கு,ஆறுதலுக்கு மிக்க நன்றி மகேஷ் அண்ணா
ReplyDeleteதொடர் வருகை தாருங்கள்
அன்புடன் ,
கோவை சக்தி