Sep 1, 2011

தங்கம் ஜாக்கிரதை -அபாயம்

தங்கம் தங்கமாய் விலையிலும் ,மதிப்பிலும் ஜொலிக்கிறது .கூடவே தங்கத்தின் ஆபத்தும் அதிகமாய் வளர்கிறது இதற்கு நாளேடுகளில் பெருகி வரும் கொள்ளை கொலை செய்திகளே சாட்சி . .தங்கம் கைக்கு எட்டா கனியாக விலை உயர்ந்து வருகிறது .விலை உயர உயர நாளுக்கு நாள் கொலைகளும் , கொள்ளைகளும் அடுக்கடுக்காக நடந்தேறி வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சிறிய தங்க சங்கிலிக்காக கழுத்தை அறுத்து உயிரை பலியாக்கவும் கொள்ளைகாரர்கள் தயங்குவதில்லை .காரணம் தங்கத்தின் விலை ஒரு கிராம் தங்கம் இன்று ரூபாய் 2600 .

பொது நிகழ்ச்சிகள்,கல்யாண வைபவங்கள் செல்லும்போது தமது ஆடம்பரத்தை காட்டும் வகையில் தங்க ஆபத்தை எதிர்கொள்ள வேண்டமே !

திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் பெண்கள் அணியும் தங்கத்தின் சராசரியான விலை பட்டியல் இதோ :

செயின் -3 பவுன்
ஆரம்-5 பவுன்
கம்மல் -அரை பவுன்
வளையல் -3 பவுன்
மோதிரம் -அரை பவுன்
ஆக மொத்தம் குறைவாக 12 பவுன் விலை 12 * 21000 =252000 .

ஆபத்து புரிகிறதா .

திருமண நிகழ்ச்சியில் தனியாக விளையாடும் நகை அணிந்துள்ள சிறு குழந்தைகளை கண்காணிக்கும் கும்பல் உண்டு ஆபத்து நகைக்கு என்றால் தாங்கிகொள்ளலாம் குழந்தைக்கென்றால் ?


ஆபத்தை தவிர்க்க சில ஆலோசனைகள் !!!!
காலை வேளைகளில் அதிகாலை எழுந்து தனியாக வாசல் கூட்டுவதை பெண்மணிகள் தவிர்க்கவும் .ஆள் நடமாட்டம் தொடங்கியவுடன் வெளியே வரலாம் .


தமது கை பையில் பெப்பர் ஸ்ப்ரே அவசியம் வைத்து கொள்ளவும்

வாகனத்தில் நம்மை யாராவது பின் தொடர்வது தெரிந்தால் அருகில் உள்ளவர்களுடன் தயங்காமல் உதவி கேட்கவும் .அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் .

வாகனத்தில் வந்து நகை பறிக்க கழுத்தில் கைவைப்பது தெரிந்தால் இரு கைகளால் நகை பிடித்துகொண்டு டக்கென்று கீழே அமர்ந்து விடவும் வாகனத்தில் வருபவர்கள் தடுமாறிவிடுவர்கள்.

இதையும் மீறி தாக்க வரும் கொள்ளைகாரர்களை தைரியமாக தொடர்ந்து தமது கையாலோ ,கை பையாலோ ,குடையாலோ ,கண் பகுதியோ அல்லது கழுத்து உணவு குழாய் பகுதியையோ தாக்கவும் எவ்வளவு பெரிய பலசாலியானாலும் கீழே வீழ்வது நிச்சயம் (மிகுந்த வேகமாக தாக்கிவிட வேண்டாம் ஜாக்கிரதை )

பலமாக அச்சுறுத்தும் வகையில் கூச்சலிடவும் .

தனியாக ஆட்டோ அல்லது டாக்சியில் பயணிக்கும் போது நமக்கு வேண்டியவர்களுக்கு பயணிக்கும் வாகன எண் மற்றும் பயணிக்கும்,கடக்கும் பகுதியை sms மூலம் தொடர்ந்து அனுப்பலாம் .

சரி பெண்களுக்கு நகை தான் அழகு .அது இல்லாமல் எப்படி நிகழ்சிக்களுக்கு செல்வது என்று கேட்பது புரிகிறது ?

இன்றைய சந்தைகளில் 1 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் கலை நயம் மிக்க வேலை பாடுகளுடன் கிடைகிறது இந்த நகைகள் அசல் தங்க நகைகளுக்கும் 1 கிராம் தங்க நகைகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை .கவரிங் நகைகளை போல் 1 கிராம் நகைகள் கறுப்பதில்லை .யாராலும் தங்க நகை இல்லை என்ற வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் .ஆபத்தும் இல்லை .

நகைகள் வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கர்களில் வைப்பது சிறந்தது தேவை உள்ளபோது உபயோகித்து கொள்ளலாம் .

முதலீடாக தங்கம் சேமிப்போர் ஆபரணம் வாங்குவதை விட 24 கேரட் காயின் வாங்கலாம் அல்லது தங்கம் எலக்ட்ரானிக் பண்டுகளில் மாதா மாதம் முதலீடு செய்யலாம் .

தங்கத்தால் ஆபத்தில்லாமல் பயனடையுங்கள் வாழ்த்துக்கள்


அளவான ஆடம்பரமா? அல்லது ஆபத்தை காத்திருந்து வரவேற்பதா முடிவு உங்கள் கையில் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

14 comments:

 1. இன்றிய மக்களுக்கு மிகவும் தேவையான ஆலோசனை மிக்க நன்றி !!!!!!!!!!

  ReplyDelete
 2. தாங்கள் வருகைக்கு நன்றி திரு .அருண்

  நட்புடன்,
  கோவை சக்தி

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி ..........

  ReplyDelete
 4. அசத்தல் பதிவு ........

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி நண்பரே தொடர்ந்து வருகை தரவும்
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 6. நல்ல விழிப்புணர்வு உள்ள பதிவு... நன்றி சக்தி

  ReplyDelete
 7. மிகவும் அவசியமான பதிவு நண்பரே!தொடருட்டும்
  உங்கள் சேவை!வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வாங்க ஞானா ,
  விலைமதிப்பற்றது ,நகை ஆடம்பரமா?உயிரா ?என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் .
  நன்றி ஞானா
  அன்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 9. அன்பு நண்பர் ஸ்ரீதர் ,
  உங்கள் முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி .தொடர்ந்து வருகை தாருங்கள் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 10. நன்றி மகேஷ் அண்ணா

  அன்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 11. இன்றைய சந்தைகளில் 1 கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட நகைகள் கலை நயம் மிக்க வேலை பாடுகளுடன் கிடைகிறது இந்த நகைகள் அசல் தங்க நகைகளுக்கும் 1 கிராம் தங்க நகைகளுக்கும் எந்த வித்தியாசமும் தெரிவதில்லை .கவரிங் நகைகளை போல் 1 கிராம் நகைகள் கறுப்பதில்லை .யாராலும் தங்க நகை இல்லை என்ற வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம் .ஆபத்தும் இல்லை . //

  திருடுபவன் நம்மிடம் இது கவரிங்கா....ஒரிஜினலா என கேட்டு திருடுவதில்லை...ஆளை தாக்கிவிட்டு கவரிங்கை திருடிசென்றுவிட்டால் என்ன செய்வது? பாதிப்பு நமக்குதானே...எனவே நகைகளை தவிர்ப்பதே நல்லது...(நகை வாங்கிகொடுக்காததற்கு வீட்டுகாரம்மாவிடம் காரணம்சொல்லி எப்படி எல்லாம் சமாளிக்கவேண்டி உள்ளது)
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 12. வேலன் அண்ணா வணக்கம் ,
  நீங்க சொல்லுகின்ற காரணம் சரி.நாம் அணிந்திருப்பது கவரிங் என்றால் நாம் நகையை காக்க போராட மாட்டோம் . மாற்றாக தாக்கவோ அல்லது நம்மை தற்காத்துகொள்ளவோ முயல்வோம் .தங்கம் என்றால் அதை பாதுகாப்பதில் தான் கவனம் இருக்கும் உடனடியாக மூளை வேலை செய்யாது பதட்டம் தான் அதிகமாகும் .நகை வாங்கி கொடுப்பதில் இருந்து தப்பிக்க எப்படியோ உங்களுக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது .மகிழ்ச்சி .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்