
பெங்களுரை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் செயல்படுகிறது, இந்நிறுவனம் தாய்லாந்து சென்று வர நபர் ஒருவருக்கு ரூபாய் 10000 ,தங்கும் இடம் ,உணவு ,சுற்றிபார்க்க எல்லாம் இலவசம் என்று அறிவித்தது .
இந்த விளம்பரத்தை பார்த்து கோவையை சேர்ந்த தம்பதியினர் இருவரும், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து 110 பேரும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்திற்கு கடந்த 8 ம் தேதியன்று புறப்பட்டு சென்றனர் .
அங்கு இவர்களை வரவேற்ற ஏஜென்ட் ஒரு ஹோட்டலில் எல்லோரையும் தங்கவைத்தனர் .மறுபடியும் ஏஜென்ட் வரவில்லை.தங்கி இருந்தவர்கள் ஏஜெண்டை தொடர்பு கொண்டபோது இந்தியாவில் இருந்து எங்களுக்கு பணம் வரவேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் தலா ரூ .30000 / = தரவேண்டும் இல்லாவிட்டால் உங்களை விடமாட்டோம் என்று எல்லோரின் பாஸ்போர்ட்டையும் பிடுங்கிக்கொண்டு 110 பேரையும் சிறை பிடித்தனர் .
இந்த தகவலை கோவையை சேர்ந்த நபர் தனது மகளான கல்லூரி பெண்ணிடம் நடந்தவற்றை போனில் தெரிவித்து காப்பாற்றும்படி கூறிவுள்ளார் .
உடனடியாக அப்பெண் தனது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களால் வழங்கப்பட்ட அவருடைய தொலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார் .கனிவுடன் விசாரித்த தற்போதைய வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு.Dr.சைலேந்திர பாபு உடனடி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.
ஸ்மார்ட் ட்ரிப் சுற்றுலா டிராவல்ஸ் தொடர்பு கொண்டபோது அவர்கள் சுமார் பத்து லட்ச ருபாய் பெற்று கொண்டு தலை மறைவானது தெரிய வந்தது .
தொடர்ந்து தாய்லாந்தில் உள்ள ஏஜெண்டுகளிடம் தொடர்புகொண்ட திரு .Dr.சைலேந்திர பாபு 110 பேரும் ஏமாற்றப்பட்ட விசயமும் அவர்களை உடனடியாக இந்தியா அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுத்து "உங்களுக்கு சேரவேண்டிய பணத்தை அனுப்பிவைக்கிறோம் "என்று உறுதியளித்தார் .
ஐ.ஜி.திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உறுதியளிப்பை ஏற்றுகொண்ட ஏஜெண்டுகள் அனைவரையும் ஹோட்டல் அறையில் இருந்து விடுவித்தனர் .அவர்களின் பாஸ்போர்ட்டும் திருப்பி வழங்கப்பட்டு 110 பேரும் இந்தியா வருவதற்கான விமான டிக்கெட்டும் வழங்கப்பட்டது .இன்று அவர்கள் சென்னை அடைவார்கள் . அனைத்து பயணிகளும் தாங்கள் காப்பற்றபட்டதை அறிந்து பெரும் மகிழ்ச்சியும் நிம்மதி பெருமூச்சும் அடைந்தனர் .
பொது மக்கள் இனிமேலாவது இலவசங்களை நம்பி ஏமாறாமல் தீர விசாரித்து பயணங்கள் தொடரவும்
வடக்கு மண்டல ஐ .ஜி .உயர்திரு. Dr.சைலேந்திர பாபு அவர்களின் உடனடியான அதிரடி நடவடிக்கையால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் . 110 இந்தியர்களை கடல்கடந்து இருந்தாலும் எல்லைகளை கடந்து மீட்ட உயர்திரு.Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் பாராட்டுகளும் ,நெஞ்சார்ந்த நன்றிகளும் ,தொடர்ந்து இது போன்ற பல சாதனைகள் தொடரவும் வாழ்த்துக்கள் .
ஜெய் ஹிந்த்