Sep 2, 2012

பங்கு வர்த்தகம் மலர் -126





நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5321.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5328.00 வரை உயர்ந்தது 5268.95 வரை கீழே சென்று 5291.65 முடிவடைந்தது.

  • எதிர்பார்த்ததை விட சற்று மேலே    GDP -DATA  ஆறுதலாக வெளிவந்துள்ளது .
  • இந்த மாதம் நடைபெற உள்ள RBI சந்திப்பும் ,அதனை தொடர்ந்து வரும் அறிவிப்பையும் வர்த்தகர்கள் பெரிதும்  எதிர் நோக்கி உள்ளனர் .
  • நம் நாட்டின் அந்நிய செலாவணியின் சொத்து மதிப்பு 25,787 கோடி டாலராக உள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன .
  • நம் நாட்டின் நிதி பற்றாக்குறை 2.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .இது சென்ற ஆண்டை காட்டிலும் 18 % உயர்ந்துள்ளதாக CAG ( தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு )அறிவிப்பு தெரிவிக்கிறது .
  • அரசின் வருவாயை காட்டிலும் ,நம் செலவீனம் அதிகரித்துள்ளதால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது .
  •  2011-2012 ம் நிதியாண்டில்  மொத்த உள்நாட்டு  உற்பத்தியில்   நிதி பற்றாக்குறை 5.76 % மாக அதிகரித்தது  . நடப்பு நிதியாண்டில்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 % அதாவது 5 .13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பர்க்கபடுகிறது .
  • வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலானவை வளர்ச்சி கண்டுள்ளது .மாருதி சுசுகி நிறுவனம் தொழிலாளர் பிரச்சினை ,போன்ற காரணங்களால் மானேசர் தொழிற்சாலை மூடப்பட்டதால் ,இந்நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது .
  • நம் நாட்டிற்கு இறக்குமதியாக 900 டன்  தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது இந்நிலையில் நம் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 2 டன் தங்கம் உற்பத்தியாகிறது  என நம் நிதி துறை இணை அமைச்சரான எஸ் .எஸ் .பழனிமாணிக்கம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் .
  • SAIL-நிறுவனத்தின் உற்பத்தியில் 7 % உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
  •   
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5297 STAYED ABOVE 5314 TARGETS ,,5327 ,,5336,5351,,

THEN 5370,,5396,,

SUPPORT LEVELS 5261,,5253 .,,,


SELL BELOW 5243 STAYED WITH VOLUME -5230,TARGETS 5220,5205,,5191,,


THEN 5170,,5156,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்