Sep 9, 2012

பங்கு வர்த்தகம் மலர் -131



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   5369.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5389.60 வரை உயர்ந்தது 5362.05 வரை கீழே சென்று 5380.20 முடிவடைந்தது.
  • நம் இந்தியாவின் 100 வது செயற்கை கோள் எய்தி நம் நாட்டின் திறமையை உலகிற்கு பறைசாற்றி உள்ளனர் .நம் விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .ஜெய் ஹிந்த் 
  • ஐரோப்பிய நாடுகளின் மத்திய  வங்கிகளின் அறிவிப்பை தொடர்ந்து உலக சந்தை மற்றும் நமது சந்தையும் ,உயர்வை அடைந்தது .
  • இந்தியாவின் ஏற்றுமதி 1 .23 லட்சம் கோடியாகவும்,இறக்குமதி 2 .08   கோடியாகவும் உள்ளது.
  • இதனையடுத்து இந்திய வர்த்தக பட்ற்றக்குறை 85 .250 கோடி ரூபாயாக உள்ளது .
  • பொறியியல் துறை நிறுவனங்களின் வருவாய் 8 .6 % சரிவடைந்துள்ளது .
  • சில நிறுவனங்கள் :BHARATH ELECTRONICS  , THERMOS ,BGR ENERGY SYSTEMS ,BEML ,ஆகிய  நிறுவனங்கள் இரட்டை இழக்க சரிவை சந்தித்து உள்ளன .
  • JOTHI STRUCTURES  , SEEMANS INDIA  ,நிறுவனகள் 3 % வளர்ச்சி குறைந்துள்ளது .
  • L & T நிறுவனம் இதில் எவ்வித பாதிப்பையும் அடையவில்லை .இந்நிறுவனம் பல்வேறு துறைகளில்  ஈடுபட்டுள்ளது .
  • 12 -ம் ஐந்தாண்டு திட்டத்தில் ( 2012-2017 ) நாட்டின் பொருளாதரத்தில் ஆண்டுக்கு 8.2% வளர்ச்சி  இருக்கும் என்று மத்திய திட்ட குழு தெரிவித்துள்ளது .
  • முதலில்  9 % வளர்ச்சி ஏற்படும் என்று  மத்திய திட்ட குழு  அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
  • வரும் 14 -ம் தேதி வெளிவர உள்ள பாரத ரிசர்வ் வங்கியின் ஆய்வு அறிக்கையின் முடிவுகளில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்க படுமா ?என்பதை சந்தை எதிர் நோக்கி உள்ளது ,
  • நம் நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, கிட்டத்தட்ட பூஜ்ய நிலைக்கு சென்று விட்டதால், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்கத் தவறும்பட்சத்தில், நிலைமை படுமோசமாகி விடும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவர் ஆதி கோத்ரெஜ் எச்சரித்துஉள்ளார்.
                    
இன்றைய NIFTY FUTURE LEVELS :


BUY ABOVE 5390 STAYED ABOVE 5404 TARGETS ,,5418,,5432,5446,,

THEN 5462,,5490,,

SUPPORT LEVELS 5355,,5341 .,,,


SELL BELOW 5330 STAYED WITH VOLUME -5319,TARGETS 5307,5293,,5280,,


THEN 5260,,5245,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


2 comments:

  1. மிக்க நன்றி சார்... (கொஞ்சம் லேட்... - Power cut)

    ReplyDelete
    Replies
    1. பவர் கட் ஆனாலும் ,உங்கள் பின்னூட்டம் இருந்தால் தான் பதிவு நிறைவடைகிறது ,நன்றி நண்பரே

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்