Nov 25, 2012

ரயில் பயணம் செய்பவரா ? டிசம்பர் 1 முதல் கவனம் !


மறவாதீர் ! மறவாதீர் ! மறவாதீர் ! 

         


 டிசம்பர் 1ம் தேதியில்  முதல்  முன்பதிவு வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் பயணத்தின்போது புகைப்படத்துடன் கூடிய ஒரிஜினல் அடையாள அட்டை ஏதேனும் ஒன்று வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதன் அடையாள அட்டைகளாக :

            

  • வாக்காளர் அடையாள அட்டை, 
  • பாஸ்போர்ட், 
  • பான் கார்டு, 
  • டிரைவிங் லைசென்ஸ்,
  • வரிசை எண்களுடன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள், 
  • பென்ஷன் பே ஆர்டர், 
  • புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு,
  • சீனியர் சிட்டிசன் கார்டு, 
  • பிபிஎல் கார்டு, 
  • போட்டோவுடன் கூடிய இஎஸ்ஐ கார்டு, 
  • சிஜிஎச்எஸ் கார்டு 
  • அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, 
  • கல்லூரிகளில் இருந்து வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை, 
  • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ் புத்தகம், 
  • லேமினேட் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய வங்கிகளின் கிரடிட் கார்டு,
  •  ஆதார் அடையாள அட்டை, 
  • வரிசை எண்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை
ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

எந்த அடையாள அட்டையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஜெராக்ஸ் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

               

ஒரே டிக்கெட்டில் பலர் குழுவாக பயணித்தாலும் அனைவரிடமும் செல்லுபடியாகக்கூடிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


குடும்ப சகிதமாக பயணம் மேற்கொண்டால், ஒருவர் மட்டும் அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது என்றும், மற்ற எந்த பிரிவில் சென்றாலும், தனித்தனி அடையாள அட்டைகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டும், விபத்து நிகழும்போது, பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளர் கண்டறியும் நோக்கத்தோடும், இந்த புதிய முறையை அமல்படுத்த திட்டமிட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





18 comments:

  1. முக்கியமான தகவல்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் , மிக்க நன்றி

      Delete
  2. வல்லரசு இந்தியாவே!
    இத்தனை கருமத்திற்கு one and driving license இருந்தால் போதுமே (வண்டி ஒட்டுபர்கள்)
    ஓட்டமுடியாதவர்கள் govt. issued I.D.

    இங்கு அதைத் தவிற வேற ஒரு I.D. தேவையில்லை! ஏன் பத்து வருடம் முன்பு கனடாவிற்கு நாங்கள் d செல்லும் பொது American Driving license வைத்துக் கொன்டாளே போதும்; பாஸ்போர்ட் கூட தேவையில்லை...!


    கதை முடிந்தது...


    வாக்காளர் அடையாள அட்டை,
    பாஸ்போர்ட்,
    பான் கார்டு,
    டிரைவிங் லைசென்ஸ்,
    வரிசை எண்களுடன் வழங்கப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டைகள்,
    பென்ஷன் பே ஆர்டர்,
    புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு,
    சீனியர் சிட்டிசன் கார்டு,
    பிபிஎல் கார்டு,
    போட்டோவுடன் கூடிய இஎஸ்ஐ கார்டு,
    சிஜிஎச்எஸ் கார்டு
    அங்கீகரிக்கப்பட்ட பள்ளி,
    கல்லூரிகளில் இருந்து வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை,
    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பாஸ் புத்தகம்,
    லேமினேட் செய்யப்பட்ட போட்டோவுடன் கூடிய வங்கிகளின் கிரடிட் கார்டு,
    ஆதார் அடையாள அட்டை,
    வரிசை எண்களுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை

    ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. சார் வணக்கம் ,
      உங்கள் கருத்துக்கும் ,அனுபவ பகிர்வுக்கும் நன்றி ,
      govt. issued I.D. என்றால் பலருக்கும் கேள்விகள் பல எழும் .
      ஆகவே அடையாள அட்டை விவரங்கள் விளக்கமாக தரப்பட்டுள்ளதுங்க !

      Delete
  3. Replies
    1. ரொம்ப நன்றி நண்பா !

      Delete
  4. முன் கூட்டிய தகவலுக்கு நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தனபாலன் சார்

      Delete
  5. Replies
    1. வரவேற்புகள் சார்

      Delete
  6. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வரவேற்புக்கும் ,வருகைக்கும் மிக்க நன்றிங்க !

      Delete
  7. எங்களுக்கு பங்கு வர்த்தகம் குறித்த அறிவு இல்லாததால் உங்களின் தொடர்ந்த பதிவுக்கு வரமுடியவில்லை.இந்த பகிர்வு அவசியமான பதிவு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி ,
      உங்கள் வருகைக்கு நன்றி .மகிழ்ச்சி !

      Delete
  8. அடடே.....தகவலுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. முத்தண்ணே வணக்கம் ,

      நன்றிங்க !

      Delete
  9. பயனுள்ள பதிவு

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் ,கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே !
      தொடர் வருகை தாருங்கள் .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்