Jun 30, 2013

நீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு




உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சதாசிவம் அய்யா அவர்களுக்கு  மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் ,

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் 59 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பது குறுப்பிடத்தக்கது .இது தமிழக மக்களுக்கு பெருமையும் ,மகிழ்வையும் அளித்துள்ளது .

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அல்டமாஸ் கபீர், வரும் ஜூலை 18ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதிலாக  புதிய தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்பட்டுள்ளார். 

குடும்ப பின்னணி  

     நீதிபதி பி.சதாசிவம்  அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர் என்ற பெருமை பெற்றவர் .


கடந்து வந்த பாதை

  சென்னை ஐகோர்ட்டில், அரசு வழக்கறிஞர், கூடுதல் அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடராக, பதவி வகித்தார். சிவில், கிரிமினல், கம்பெனி வழக்குகளில் ஆஜராகி வந்தார். 


அரசு போக்குவரத்து கழகங்களின் சட்ட ஆலோசகராகவும், நகராட்சிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஆலோசகராகவும் பணியாற்றிள்ளார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதியாக, 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி, நியமிக்கப்பட்டார். 11, ஆண்டுகளுக்குப் பின், பஞ்சாப் - அரியானா ஐகோர்ட்டுக்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில், இடமாற்றம் செய்யப்பட்டார்.சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக, 2007ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார்.

                                   

சில முக்கிய தீர்ப்புகள் 

                  பல முக்கிய வழக்குகளில், நீதிபதி சதாசிவம் தீர்ப்புகள் :
  • மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், 10 பேருக்கு, ஆயுள் தண்டனையாக குறைத்தும், தீர்ப்பளித்தார்.மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தான், ஆயுத சட்டத்தின் கீழ், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை, ஐந்து ஆண்டுகளாக, குறைத்து தீர்ப்பளித்தார். 
    • டில்லியில் நடந்த, ஜெசிகா லால் கொலை வழக்கில், மனுசர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, உறுதி செய்தார். 
    • பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிரான, சொத்துக் குவிப்பு வழக்கில், சி.பி.ஐ.,யின், முதல் தகவல் அறிக்கையை, ரத்து செய்தார்.
    • ரிலையன்ஸ் வழக்கில், ஜனநாயகத்தில், நமது நாட்டின் சொத்துக்கள், மக்களுடையது. மக்களின் நலன்களுக்காக, அந்தச் சொத்துக்களை, அரசு பேணுகிறது என, தீர்ப்பளித்தார்.
    • பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளுக்கு, முன்னுரிமை வழங்க வேண்டும் என, நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
    • தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின், நிர்வாகத் தலைவர் என்கிற முறையில், பல மாநிலங்களுக்கும் சென்று, சட்டக் கல்வியறிவு முகாம்களை, கிராமப்புறப் பகுதிகளிலும், பள்ளி, கல்லூரிகளிலும் துவங்கியுள்ளார்.

பதவி காலம் 

வரும் 2014 ஏப்ரல் மாதம் 27 ம் தேதி அவர் ஓய்வு பெரும் வரை அவர்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி  வகிப்பார்.

முயற்சி திருவினையாக்கும் 

அரசு பள்ளிகளில் படிப்பதை விட கான்வென்ட்டில் படித்தால் மட்டுமே பெரிய மனிதராக முடியும் என்ற கூற்றை மாற்றும் வகையில் படிப்பு ,கவனம் ,விடாமுயற்சி ,தன்னம்பிக்கை இருந்தால் சாதனைகள் பல செய்யலாம் என்பதற்கு இவர் சிறந்த உதாரணம் ஆவார் .சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாதித்தது  படிப்பும் ,உழைப்பால் மட்டுமே உயர்ந்துள்ளார் .

தாயார்  நாச்சாயி அம்மாள் கூறியதாவது  :

என் மகன் சதாசிவம், சிறுவயதில் இருந்தே படிப்பில் அதிக ஆர்வம் உடையவர். பள்ளிக்கூடத்துக்கு லீவு எடுக்காமல் செல்வார். அதையே, இன்று வரை தொடர்கிறார். விவசாய குடும்பம் என்பதால், குடும்ப சூழல் காரணமாக, ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சேர்த்தோம். நாங்கள் படிக்காதவர்கள்.படிப்பின் மேல் உள்ள ஆர்வத்தால், ஆசிரியரின் மீது பெரிதும் மரியாதை கொண்டவர். மேல்நிலைப் பள்ளியின், கணித ஆசிரியர் விஸ்வநாதன் மேல் பக்தியும் ,பற்றும்  கொண்டவர். அவர், படிப்பின் மேல் வைத்த மரியாதை, இன்று பெரிய பதவிகளை கொடுத்துள்ளது. கான்வென்டில் படித்தவர்கள் தான் பெரிய பதவிக்கு வரமுடியும் என நினைத்தவர்களுக்கு  அரசு பள்ளியில் படித்தாலும், வாழ்வில் உயரலாம் என, நிரூபித்துள்ளார்.



4 comments:

  1. Mr,Sthasivam avarkalin Relaince methana Thirpu unmail arputham.. avarudaia natain akkaraiyayai thelivaga kaatukirathu.!!!!!

    Nandri sakthi!!!!!
    ungal sevai thodaratum.!!!!

    By
    Thiyagu
    Australia

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தியாகு சகோதரரே

      Delete
  2. இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றவரின் சிறப்புக்களைப் பட்டியலிட்டுக்காட்டிய கோவை சக்திக்கு மிக்க நன்றி .
    இவரது பதவிக்காலம் மேலும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். வயது உச்சவரம்பை அதிகரிக்கும் எண்ணமும் நடுவரசுக்கு இருப்பதாகச் செய்திகள் வெளியானது நினைவில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க ராமசாமி ஐயா

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்