ஓசை சுற்று சூழல் அமைப்பு கடந்த ஜனவரி- 2000 வருடம் ,முதல் உயர்திரு கே .காளிதாஸ் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டு இன்று வரை 13 வருடங்களாக பல நல்ல செயல்கள் புரிந்து வருகின்றனர் .காடுகளின் பாதுகாவலனாகவும் ,வனவிலங்குகளின் நண்பர்களாகவும் ,வன விலங்குகள் ,பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பாகவும் ,மலைவாழ் மக்களின் மேம்பட்டிற்காகவும் ,பல ஆய்வுகளுக்கு மாணவர்களுக்கு உதவிகள் செய்வதுடன் ,இன்று சுற்று சூழலினால் அழிந்து வரும் நிலையை காக்கவும் ,பல முயற்சிகளில் வெற்றி கண்டும் ,சுற்று சூழல் பாதுகாக்க மேலும் பல முயற்சிகள் செய்து வருகின்றனர் .
கடந்த ஞாயிறு 28/01/2013 அன்று மாலை கோவையில் தமிழ்நாடு ஹோட்டலில் ஓசை சுற்று சூழல் அமைப்பு சார்பாக யானைகள் மற்றும் மனித மோதல்கள் ஏன் அடிக்கடி நடக்கிறது ?,இதனை எவ்வாறு தடுப்பது ?என்பது குறித்த ஒரு கருத்தரங்கம் சிறப்பாக நடந்தது .
இந்த கருத்தரங்கில் திரு.காளிதாஸ் அவர்கள் தலைமையில் " யானைகள் மற்றும் மனித மோதல்கள் " குறித்து WWF அமைப்பின் "துணை மேலாளர் " திரு .ஜி.சிவசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .
உடன் எழுத்தாளர் திரு ,ஞானி ஐயா ,மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர் .
அழியும் காடுகள்
- காடுகள் பெரும்பான்மையான அளவு அழிக்கபட்டு ,நகர்புற மயமாக்கல் என்ற பெயரில் புதிய புதிய வீட்டு மனைகளும் ,சாலைகளும் ,வீடுகளும் ,தொழிற்சாலைகளும் கட்டப்பட்டு வருவதே காரணமாகும் .

- புற்றீசல் போல பல கல்வி நிறுவனங்கள் மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து வருகின்றனர் இங்கு மலிவான விலையில் விவசாயிகளிடமிருந்தும் ,காட்டை அடுத்துள்ள நிலங்களை ஆக்கிரமித்தும் வருகின்றனர் .
- மனதை புண்படுத்தும் விஷயம் என்னவென்றால் பாதுகாவலர்களான சில தவறான அதிகாரிகளும் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் ,துணை போவதே இத்தனை அவலங்களுக்கும் முக்கிய காரணமாகும் .
- காட்டை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் வரை இந்த ஆக்கிரமிப்புகள் தொடரும் .
- நாளடைவில் காட்டு விலங்குகள் அழிவதோடு மட்டும் அல்லாமல் ,வன விலங்குகள் நகர் புறம் நோக்கி நகரும் அபாயம் அதிகம் உள்ளது .
- இந்த பிரச்சனை யை தவிர்க்க ,தடுக்க அரசு தீவிர அவசர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் .ஒரு நிபுணர் குழு அமைக்கபட்டு ஆக்கிரமித்துள்ள காடுகளையும் ,நிலங்களையும் ,மீட்க நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் .
- யானைகள் -மனித மோதல்கள் ஏன் ?
- மலைவாழ் மக்கள் பல வருடங்களாக காடுகளில் வசித்து வருகின்றனர் அந்த காலகட்டங்களில் யானைகள் இந்த அளவு மனிதர்களை தாக்கியதாக தெரியவில்லை காரணம் அன்று யாரும் யானைகளை துன்புறுத்தியதில்லை .மலைவாழ் மக்களுக்கும் விலங்குகள் பற்றிய அறிவு இருந்தது .
- ஆனால் நகர்புற மனிதனுக்கு விலங்குகள் பற்றிய அறிவு இல்லாததும் ,தீவிர பயமும் ஒரு காரணம் இவர்கள் யானைகளை தாக்குவதும் யானைகள் இவர்களை தாக்குவது இயல்பாகிவிட்டது .
- இன்றோ யானைகளின் இடங்களை மனிதர்கள் பிடித்ததோடு மட்டும் அல்லாமல் யானைகளை ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் ,பல வகைகளில் யானைகளை துன்புறுத்துவதால் மனிதர்களை கண்டாலே துரத்துகின்றன .
- காடுகள் அழிக்கபடுவதால் விலங்குகளின் உணவு மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பறிக்கபடுகின்றன .ஆகவே யானைகள் உணவு,நீர் தேடி நகர்புறம் வருகின்றன .
- யோசித்து பார்த்தால் கடந்த 5 முதல் 10 வருடங்களாக தான் இந்த மோதல்கள் நிகழ்கின்றன .இதற்க்கு முக்கிய காரணம் காடுகளை அழித்த மனிதன் ,மனிதன், மனிதன் மட்டுமே .
- யானைகளிடமிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் ?
- மலையோர கிராம விவசாயிகள் யானைகள் விரும்பும் பயிர்களை தவிர்த்து ,அதற்க்கு பிடிக்காத பயிர் வகைகளை பயிரிடலாம் .(அப்படிப்பட்ட அதிக லாபம் தரும் பயிர்களை பயிரிட விவசாய ஆய்வு கழகங்கள் உதவ வேண்டும் )
- யானைகள் சுற்றி வரும் இடங்களில் மனிதர்கள் மாலை இருட்டிய பிறகும் ,அதிகாலை நேரங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் .
- யானைகளை விரட்ட வன அலுவலர்கள் துணையுடன் தனி நபராக செல்லாமல் குழுவாக செல்லவேண்டும் .
- யானைகள் நீண்ட தூரம் தொடர்ந்து துரத்தாது அதிக பட்சம் 100மீ முதல் 150 மீ வரை துரத்தலாம் .
- யானைகளுக்கு கண் பார்வை குறைவு .மோப்ப சக்தி அதிகம் .
- யானைகளை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கலாம் .ஒரு வேளை சாலைகளில் துரத்தினால் அதன் கண்களில் படும்படி நேராக ஓடாமல் மறைவில் பதுங்கி கொள்வது நல்லது .
- முடிவு :-
- யானைகளுக்கு மனிதனை தாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லை மாற்றாக அவைகள் உணவு மற்றும் குடிக்க நீர் தேடி மட்டுமே வருகின்றன .

- நாம் யானைக்கு எதிரியா ? அல்லது யானை நமக்கு எதிரியா ? என்று பார்த்தால் காடுகளை அழித்த வகையில் நாமே அதன் எதிரிகள் .
- ஒரு வகையில் பார்த்தால் யானைகள் இருப்பதால் தான் அதன் மீது கொண்டுள்ள பயம் காரணமாக , மேலும் காடுகள் அழிவை நோக்கி செல்லாமல் மனிதர்களிடமிருந்து காக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை .
- இனி வரும் காலங்களில் யானைகள் மனித மோதலை தடுக்க காடுகள் காக்க படவேண்டும் .
மேற்கண்ட தகவல்களை பகிர்ந்த ஓசை சுற்று சூழல் அமைப்பின் தலைவர் திரு.கே. காளிதாஸ் அவர்களுக்கும் , WWF திரு .ஜி.சிவசுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றிகள் .
விழிப்புணர்வு கருத்தரங்கிற்க்கு அழைத்த கோவை பதிவர் சகோதரி எழில் அவர்களுக்கும் ,முகநூல் நண்பர் திரு .சசி குமார் அவர்களுக்கும் நன்றி .