நல்ல விஷயம் ஆனாலும் சரி,தீய விஷயம் ஆனாலும் சரி அது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிக்கை நிருபர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அத்தகைய பத்திரிக்கை நிருபர்களால் ,அவர்களுடைய எழுத்துக்களால் சமூகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் , அந்த மாற்றங்கள் எல்லாம் உண்மையான நேர்மையான எழுத்துக்களாக பிரசவிக்கப்படுவது நல்ல நிருபர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லாத உண்மை .
அப்படிப்பட்ட சிறந்த ஒரு நிருபரை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இந்த பதிவு .
கோவையை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ,இளம் புயல் ,இளம் முன்னோடி ,நேர்மையானவர் , சமூக சிந்தனையாளர் ,சமூக சேவகர் ,போன்ற பாராட்டுகளை ஒருங்கே பெற்ற இளைஞரை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை .திரு .வி.பழனியப்பன் என்ற இளம் பத்திரிக்கையாளர் இளைஞரை நம் பதிவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் .
இவர் பல சமூக சேவகர்களையும் ,சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரை சாரும் .
பல சமூக சேவகர்களும் ,பல நல்ல சமூக அமைப்புகளும் உருவாக இந்த இளைஞர் காரணமாக திகழ்கிறார் என்பது உலகறியாத ஒன்று .
திரு .வி.பழனியப்பன் சிறந்த பத்திரிக்கையாளர் மட்டுமன்றி மிக சிறந்த புகைப்பட ஆர்வலருமாவார் .பத்திரிகை துறையை தன் உயிர் மூச்சாக கருதுபவர் .
சமூக அவலங்களை கண்டும் காணாமலும் செல்லும் நபர் இவரல்ல , பல சமூக அவலங்களை , தன் புகைப்படங்கள் மூலமும் தன் வலிமையான எழுத்துக்களின் வல்லமையாளும் ,சமூகத்தையும் ,அரசு அதிகாரிகளின் பார்வையையும் ,கவனத்தையும் ஈர்த்து அந்த அவலங்களை களைய போராடியவர், போராடி கொண்டிருப்பவர் .
பலர் தன் குடும்பத்தை விட்டு விலகி பல ஆண்டுகளாக தான் யாரென்றே தெரியாத நிலையில் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்தை தேடி அவர்களின் குடும்ப கூட்டில் இணைத்துள்ளார் .
இவர் இயற்கை வளங்களை காப்பதிலும் ,அதிக அக்கறை கொள்பவர் ,வன விலங்குகள் மேல் தீராத பாசமும் ,அக்கறையும் ,கொண்டுள்ளவர்.வன விலங்குகளின் நலனுக்காக பல நல்ல விஷயங்களை தன் எழுத்துக்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் .
பேனா என்ற சீவிய முனை கொண்டு சிந்தனைகளை மாற்றியவர் .இவரின் சீரிய சிந்தனைகளையும் ,எழுத்துகளையும் போற்றும் வகையில் பல அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன .
நண்பரின் செய்தி படைப்புகளை காண இங்கே சொடுக்கவும் "க்ளிக்"
நண்பரின் செய்தி படைப்புகளை காண இங்கே சொடுக்கவும் "க்ளிக்"
நாமும் இந்த இளைஞரை நம் மனதார வாழ்த்தி ,தன் வாழ்நாளில் இதே சீர் நோக்குடன் ,பல சாதனைகள் ,சேவைகளை பல புரிய வாழ்த்தும் ,பாராட்டுகளும் தெரிவிப்போம் .
" நன்றி "