Mar 17, 2013

சமூக முன்னோடி பத்திரிகையாளர் திரு .வி.பழனியப்பன்


நல்ல விஷயம் ஆனாலும் சரி,தீய விஷயம் ஆனாலும் சரி அது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிக்கை நிருபர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அத்தகைய பத்திரிக்கை நிருபர்களால் ,அவர்களுடைய எழுத்துக்களால்  சமூகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் அந்த மாற்றங்கள் எல்லாம் உண்மையான நேர்மையான  எழுத்துக்களாக  பிரசவிக்கப்படுவது  நல்ல  நிருபர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லாத உண்மை .

அப்படிப்பட்ட சிறந்த ஒரு  நிருபரை  மக்களுக்கு அறிமுகப்படுத்தும்  முயற்சிதான்  இந்த பதிவு .


கோவையை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ,இளம் புயல் ,இளம் முன்னோடி ,நேர்மையானவர் சமூக சிந்தனையாளர் ,சமூக  சேவகர் ,போன்ற பாராட்டுகளை  ஒருங்கே பெற்ற இளைஞரை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை .திரு .வி.பழனியப்பன்  என்ற இளம் பத்திரிக்கையாளர் இளைஞரை நம் பதிவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் .


இவர் பல சமூக சேவகர்களையும் ,சாதனையாளர்களையும்  இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரை சாரும் .
பல சமூக சேவகர்களும் ,பல நல்ல சமூக அமைப்புகளும் உருவாக இந்த இளைஞர் காரணமாக திகழ்கிறார்  என்பது உலகறியாத ஒன்று .


திரு .வி.பழனியப்பன் சிறந்த பத்திரிக்கையாளர் மட்டுமன்றி மிக சிறந்த புகைப்பட ஆர்வலருமாவார் .பத்திரிகை துறையை தன் உயிர் மூச்சாக கருதுபவர் .

சமூக அவலங்களை கண்டும் காணாமலும் செல்லும் நபர் இவரல்ல பல சமூக அவலங்களை தன் புகைப்படங்கள் மூலமும் தன்  வலிமையான எழுத்துக்களின் வல்லமையாளும் ,சமூகத்தையும் ,அரசு அதிகாரிகளின் பார்வையையும் ,கவனத்தையும் ஈர்த்து அந்த அவலங்களை களைய போராடியவர்போராடி கொண்டிருப்பவர் .


பலர் தன் குடும்பத்தை விட்டு விலகி பல ஆண்டுகளாக தான் யாரென்றே தெரியாத நிலையில் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்தை தேடி அவர்களின் குடும்ப கூட்டில் இணைத்துள்ளார் .


 இவர் இயற்கை வளங்களை காப்பதிலும் ,அதிக அக்கறை கொள்பவர் ,வன விலங்குகள் மேல் தீராத பாசமும் ,அக்கறையும் ,கொண்டுள்ளவர்.வன விலங்குகளின் நலனுக்காக பல நல்ல விஷயங்களை தன் எழுத்துக்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் .

          
பேனா என்ற சீவிய முனை கொண்டு சிந்தனைகளை மாற்றியவர் .இவரின் சீரிய சிந்தனைகளையும் ,எழுத்துகளையும்  போற்றும் வகையில் பல அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன .நண்பரின் செய்தி படைப்புகளை காண இங்கே சொடுக்கவும் "க்ளிக்"

 நாமும் இந்த இளைஞரை நம் மனதார வாழ்த்தி ,தன்  வாழ்நாளில் இதே சீர் நோக்குடன் ,பல சாதனைகள் ,சேவைகளை பல புரிய வாழ்த்தும் ,பாராட்டுகளும் தெரிவிப்போம் .

நன்றி "


10 comments:

 1. திரு .வி.பழனியப்பன் அவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  புகைப்படங்கள் அருமை...

  நீண்ட நாட்கள் கழித்து நல்லதொரு பகிர்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மகிழ்ச்சியான வணக்கம் திரு .தனபாலன் சார் ,நன்றி

   Delete
  2. Thanks a lot for your wish saravanan sir

   Delete
 2. எத்தனையோ நிருபர்கள் பணத்திற்காக பொய்யான தகவல்களையும் , அரசியல் தகவல்களையும் மக்களுக்கு காட்டி மக்களின் மனதை திசைதிருப்புவதுமாக இருக்கும் இக்கால கட்டத்தில் இப்படி ஒரு நண்பர் சமூக மேன்பட்டிர்க்கு முன்னோடியாக இருப்பதும் அதுவும் வி.பழனியப்பன் என்னுடைய நண்பன் என்று , சொல்லிக்கொள்வதில் பெருமை அடைவதும் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது...
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி திரு மகேந்திரன் சார் ,

   நல்ல மனிதர்களை காண்பதே பெரிது அதிலும் நல்ல மனிதர்களை சமுதாயதிற்கு அடையாளம் காட்டும் மனிதரை காண்பது மிக அரிது .

   தங்களின் நண்பர் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி ,இது வரை நானும் அவரை சந்தித்தது கிடையாது,அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள் .

   நன்றி

   Delete
 3. நல்ல மனிதரை அறிமுகப்படுத்திய உங்களுக்கு ரெம்ப நன்றிங்க . பழனியப்பன் அவர்கள் மென்மேலும் பல நல்ல செயல்களை செய்ய வாழ்த்துகிறோம் .
  நானும் கோவையை சேர்ந்தவன் தான் . பழனியப்பன் அவர்கள் தொலைபேசி எண் தருவீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க ஜீவன்சுப்பு சார் ,
   தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி,திரு .பழனியப்பன் அவர்களின் தொலைபேசி எண் எனக்கு உண்மையில் தெரியாது .நான் முயற்சி செய்து தங்களுக்கு தெரிவிக்கிறேன் .

   Delete
 4. சக்தி ஜி மிகவும் அருமையான ஒரு பதிவு ஒரு சிறந்த படைப்பாளியை அறிமுகம் செய்து உள்ளீர்கள் இன்றைய ஊடகங்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம் ஜி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க ஜி

   Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்