May 16, 2010

தனியார் பள்ளிகளின் கல்வி நிலை = அரசுக்கு வேண்டுகோள்


""மாதா பிதா குரு தெய்வம் ""
குரு என்பவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் .ஆனால் இன்றைய கால தனியார் கல்வி துறை சேவை மனபான்மையுடன் கல்வி போதிக்கபடுவதை விட முக்கியத்துவம் வியாபார நோக்கில் பெருகி வருகிறது என்பது வீதிக்கு 5 பள்ளிகூடங்கள் இருப்பது பறை சாற்றுகின்றன.பள்ளிகள் பெருகி வருவது மிக்க வரவேற்க தக்கது அதுவே பெற்றோர்களை கல்வி போதிக்கிறோம் என்ற நோக்கில் பணத்தால் சக்கையாக சாறு பிழிவது எந்தவிதத்தில் ஏற்கத்தக்கது.
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்துடன் , அன்பளிப்பு ,வளர்ச்சி நிதி ,கட்டிட நிதி , மேசை ,நாற்காலி ,காற்றாடி,என்ற பெயரிலும் வசூலிக்கிறார்கள் .

அரசின் முடிவு
தனியார் கல்வி கட்டணத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக வரன் முறைபடுத்திய தமிழக அரசிற்கும், மதிப்பிற்குரிய ஐயா தமிழக முதல்வர் அவர்களுக்கும் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியும் ,வாழ்த்துகளும் தெரிவித்துகொள்கிறேன் .
1 .அதிரடியாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு யார் காரணம்?
தனியார் பள்ளிகளின் தணியாத பண தாகமே காரணம்
கோவையில் கடந்த வருடம் S.B.O.A.பள்ளி பள்ளி கட்டணத்தை 50% சதவித்திற்கும் மேல் உயர்த்தி பெற்றோர்களின் கடுமையான போராட்டதிற்கும்,வேண்டுகோளிற்கும், செவி சாய்க்காத பள்ளி நிர்வாகம் மெத்தன போக்கை கடை பிடித்து வந்தது என்பது ஊரறிந்த விஷயம் .இது போல் சில பள்ளிகள் ,,,,
இதையெல்லாம் பார்த்த அரசு தற்போது வரவேற்கத்தக்க கிடிக்கி பிடி போட்டுள்ளது .

தனியார் பள்ளிகளின் மிரட்டல் போக்கு
தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயத்தில் குறைபாடுகள் இருப்பின் தக்க முறையில் ,நேர்மையான வழியில் மேல் முறையீடு செய்யலாம் அதைவிடுத்து நாங்கள் பள்ளிகள் திறக்க மாட்டோம் காலவரைன்றி மூடுவோம் அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை "பள்ளிகளை திறப்பதை காலவரையன்றி ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் " என்ற பத்திரிகை அறிவிப்புகள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் ,துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

அரசிற்கு வேண்டுகோள்
1.தமிழக அரசு தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசிலித்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மாற்றம் செய்யத்தக்க நியாயமான மாற்றங்களை மறு பரிசிலனை செய்யலாம் .
2.தனியார் பள்ளிகளின் மிரட்டல் போக்கிற்கு அடி பணியகூடாது.
3.தேவைப்படும் பட்சத்தில் மிரட்டல்களுக்கு கடுமையான சட்டம் கொண்டுவரலாம் .
4.தேவைப்படும் பட்சத்தில் பள்ளிகளை அரசு தன்வசபடுத்தி வேலையற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகைகளை பணிக்கு அமர்த்தி பள்ளிகளை நடத்தலாம் .
5.பெற்றோர் அமைப்புகள் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படலாம் .
6.அரசு பள்ளிக்கூடங்களின் தரத்தை உயர்த்த முழு முயற்சி எடுக்க வேண்டும் .
7.அரசு பள்ளியின் ஆசிரியர்களுக்கு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற நவீன கல்வி திட்டத்தை போதிக்கும் முறையை பயிற்றுவிக்க வேண்டும்.
8 .இதன் மூலம் தனியார் பள்ளியின் மோகம் குறைந்து அரசு பள்ளிகளை நாடி வரும் நிலை கொண்டு வரலாம் .

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்