Jun 14, 2012

உயிர் காக்க உதவுங்களேன் -ப்ப்ப்ப்பப்ப்ப்பப்ப்ளீஸ்




இன்று உலக ரத்த தான நாள் ""EVERY BLOOD DONOR IS A HERO "".இந்த நாள் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாகவும் ,அவர்களின் விலைமதிப்பற்ற இந்த சேவையை நினைவுகூரும்  தினமாகவும் ,2005 ம் வருடம் ஜூன் மாதம் 14 ம் தேதி முதல் அனுஷ்டிக்க படுகிறது .


இந்நாள் நோபல் பரிசு பெற்றவரும் ,ஏபிஓ ரத்த தான அமைப்பை நிறுவியரும் ,மதிப்பிற்குரிய  "" கார்ல்  லாண்ட்ஸ்டெய்னர்   "" அவர்களின் பிறந்த நாள் அன்று கொண்டாடபடுகிறது .

ரத்த தானம் செய்வோர் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

நமது உடலில் சராசரியாக  5முதல் 6 லிட்டர் வரை உள்ளது .ரத்த தானத்தில் நாம்  200 மி  முதல் 300 மி வரை கொடுக்கலாம் .நாம் குறைந்த பட்சம் 3 மாதங்கள் இடைவெளியில் ரத்த தானம் வழங்கலாம் .

நாளுக்கு நாள் அவசர சிகிச்சைகளும் ,விபத்துகளும் ,பெருகி விட்டன .ஆகவே ரத்த தானம் தேவைபடுவோரின் எண்ணிகையும் அதிகமாகிவிட்டது .

நமது ரத்தம் மிகுந்த விலைமதிப்பற்றது .பிறருடைய உயிர் காக்க உதவலாம் .

 ரத்த தானம் செய்வோர் ஆண் ,பெண் ,இருவரும் தரலாம் .

50  கிலோவிற்கு மேல் எடை உள்ளவர் கொடுக்கலாம் .

ஹீமோக்ளோபின் 12 முதல் 15 வரை உள்ளவர் தரலாம் .

தொடர்ந்து மருத்துவ சேவை பெறுவோர் மருந்து  உண்போர் தரகூடாது .

குறிப்பாக மது அருந்துவோர் 48 மணி நேரத்திற்கு பிறகே தரவேண்டும் .

ரத்த தானம் செய்வோருக்கு சில ஆலோசனைகள் 

ரத்த தானம் செய்வதற்கு 2  மணி நேரத்திற்கு முன் நல்ல உணவு எடுத்துகொள்ளுங்கள் .

ரத்த தானம் செய்வதற்கு முன் புகைத்தல் வேண்டாம் .புகைபிடிப்போர் 3  மணி நேரத்திற்கு பின் புகைக்கலாம் .

ரத்த தானம் செய்ய கண்டிப்பாக 3 மாத இடைவெளி எடுத்துகொள்ளவும் .

ரத்த தானம் செய்தவுடன் உடனே வாகனம் ஊட்டுவதை தவிர்க்கவும் .

மது அருந்துவோர் 24 மணி நேரத்திற்கு பிறகு அருந்தலாம் .  

பழ ஜூஸ் அல்லது தண்ணீர் அதிகம் அருந்தவும் .

                           

ரத்த தானம் பற்றிய சில பொதுவான கேள்விகளும் ,சந்தேகங்களும் ?

1 .ரத்த தானம் செய்வதால் ,அங்கு பயன்படுத்தும் ஊசியால் ,அல்லது மருத்துவமனையில் இருந்து ஏதாவது தொற்று நோய்  வருமா ?

இல்லை  .உங்களுக்காக  மிக்க பாதுகாக்கபட்ட ஊசி தான் பயன்படுத்துவார்கள் .உங்களுக்கு ஏதும் தொற்று நோய் வராது .

2 . ரத்த தானம் செய்யும் பொழுது வலிக்குமா? 

இல்லை வலிக்காது .ஊசி குத்தும் பொது மிக சிறிய வலி இருக்கும் அவ்வளவு தான் .

3 .ரத்த தானம் செய்தவுடன் நான் எனது வேலைகளை தொடரமுடியுமா அல்லது ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டுமா ?

தாரளமாக உங்கள் வேலைகளை தொடரலாம் .ஓரிரு நாள் ஓய்வெடுக்க வேண்டியது இல்லை .

4 . ரத்த தானம் செய்வதால் என் உடல் நிலை பாதிக்கப்படுமா ?

இல்லை .பதிக்கபடாது .

5 . என்னிடமே கொஞ்சம் ரத்தம் தான் உள்ளது ?

நம் உடலில் ரத்தம்   5முதல் 6 லிட்டர் வரை உள்ளது.நம்மிடமிருந்து 200 மி  முதல் 300 மி வரை மட்டுமே எடுப்பார்கள் .

6 .ரத்த தானம் செய்ய எனக்கு பயமாக  உள்ளது ?

பயப்பட தேவை இல்லை .உலகில் தினமும் பல நூறு பேர் ரத்த தானம்  செய்கிறார்கள் .

7 . ரத்த தானம் செய்வது என் கடமையா ?இதனால் எனக்கு என்ன பயன் ?

அவசியம், ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும் .ரத்த தானம் செய்வதால் நாம் பிறருக்கு உதவும் 
திருப்தியும் ,மன சந்தோசமும் கிடைக்கும் .நம் வீட்டில் யாருக்காவது ரத்த தானம் தேவைபட்டால் நாமும் வெளியே பிறரிடம் இருந்து தான் வாங்க வேண்டும் .

8 .ரத்த தானம்  செய்வதற்கு நீண்ட நீரம் ஆகுமா ?

இல்லை .10  நிமிடம் மட்டுமே ஆகும் .

9 சர்க்கரை நோய் உள்ளவர்கள் ,பிரசவித்து உள்ளோர் ,வேறு பெரிய நோய் உள்ளவர்கள் ரத்த தானம் தரலாமா ?

இவர்கள் கண்டிப்பாக ரத்த தானம் தர கூடாது ..

10 .உலகில் இத்தனை பேர் இருக்கும் பொழுது என் ரத்தம் அவசியமா ?

ஆம் .மிக அவசியம் ரத்தம் அதிக அளவில் தேவைபடுகிறது ஆகவே உலகில் ரத்த ரத்த தானம் செய்வோர் மிக அதிக அளவில் தேவைபடுகிறார்கள் .

ரத்த தானம் செய்வோம் .பிறர் உயிர் காப்போம் 

ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரின் கடமை என இந்நாள் உறுதி மொழி ஏற்ப்போம் .

""நான் ரத்த தானத்தின் பெருமை அறிந்து கொண்டேன் .நான் பிறருக்கு உதவும் 

பொருட்டு ரத்த தானம் செய்வேன்.என உறுதிமொழி ஏற்கிறேன் . ""










21 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி சங்கவி சார்

      Delete
  2. அருமையான தேவையான பகிர்வு சக்தி சார்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சுரேஷ் சார்

      Delete
  3. எல்லோருக்கும் பயன்படும் தகவல் சக்தி சார் ................

    ReplyDelete
    Replies
    1. பாபு சார் முதல் வருகை தொடர்ந்து படிங்க ! நன்றி

      Delete
  4. அருமையான தேவையான பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆனந்தன் சார் ,ரத்த தானம் செய்வது ஒவ்வொருவரும் தன் கடமை என்று உணர வேண்டும் .அதற்காகவே இந்த பதிவு .
      முதல் வருகை ஆனந்த( ம் )ன்,
      நன்றி

      Delete
  5. சக்தி சார்..

    தேவையான நேரத்தில் விழிப்புணர்வு பதிவு...

    ரத்ததானம் ப்ற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகமாகவேண்டும் என்பதே என் ஆவல்

    நன்றி...

    ReplyDelete
  6. நன்றி சம்பத் சார் ,
    நம் குழுமம் சார்பாக ஒரு ரத்த தான முகாம் பண்ணனும் என்பது ஒரு ஆசை.

    ReplyDelete
  7. விழிப்புணர்வு பதிவு பல் கேள்விகளுக்கான எளிய சரியான பதில்கள் நிச்சயம் தெளிவை தரும் ...............நானும் கூட தெளிந்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே ,
      இன்னும் ரத்த தானம் பற்றிய அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் .தொடர் முயற்சியில் இருக்கிறோம் .

      நட்புடன் ,
      கோவை சக்தி

      Delete
  8. http://www.kovaineram.com/2011/12/blog-post_10.html

    நானும் தான் எழுதி இருக்கிறேன்...யாரு வந்து பார்க்கிறா...?ம்ம.எப்படியோ முக்கிய மான தினத்தில் பதிவ போட்டு நல்ல பேரு வாங்கிடீங்க..நல்லா இருங்க..வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பா ,நீங்க எழுதினா என்ன ?நான் எழுதினா என்ன ?நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு நண்பா ,,,,,,,
      எப்படின்னு கேளுங்க நாம் எல்லோரும் சிவப்பு நிறம் . சிவப்பு ரத்தம் .ஹி ஹி ஹி ஹி

      Delete
  9. நல்ல பகிர்வு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராம் சார் ,
      எல்லோரும் ரத்த தானம் செய்வோம் ,,,,

      Delete
  10. Replies
    1. வாங்க தனபாலன் சார் ,
      தாங்கள் முதல் வருகை தொடரட்டும் நட்புடன் .நன்றி

      Delete
  11. வணக்கம் அன்புச் சகோதரரே தங்கள் தகவல்
    மிகவும் பயனுள்ள தகவலாக அமைந்துள்ளது .
    மிக்க நன்றி பகிவுக்கு மேலும் நல்ல தகவல்களைத்
    தொடர வாழ்த்துகின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி

      Delete
  12. Hurrah! At last I got a weblog from where I be able to actually get valuable data
    regarding my study and knowledge.

    my web-site; panic at the disco (en.wikipedia.org)

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்