Jun 21, 2013

மாணவ நட்சத்திரங்களுக்கு தீப அஞ்சலி



ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக இன்று கோவையில் விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .கீதா அவர்கள் தலைமையில் ஈர நெஞ்சம் அமைப்பின்அறங்காவலர்  திரு.மகேந்திரன் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பினர் திரு.கோவை சக்தி மற்றும் திருமதி .பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர் .


 அப்பள்ளி மாணவர்களுக்கு ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது .








விழாவில் 19.06.13 அன்று  கோர விபத்தில் பலியான புதுக்கோட்டை, வல்லந்திராக்கோட்டை அரசு பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு இரங்கலும் ,தீபம் ஏந்தி கண்ணீர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு , மற்றும் வாகன விபத்துக்கள் தொடர்பாகவும் ,வீட்டில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு சற்று முன்னதாக கிளம்பி பாதுகாப்புடன் வந்து செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.

                      

                      
                       
அதனை தொடர்ந்து அப்பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற N.கோகிலா (453) , இரண்டாம் மதிப்பெண் பெற்ற R. அருண்குமார் (438) அவர்களுக்கு பாராட்டுக்களும் ,பரிசுகளும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டன .

                       

                       

மேலும் அப்பள்ளி துவங்கப்பட்டு முதலாம் ஆண்டுலே 10 ம் வகுப்பு தேர்வில் 100 % தேர்ச்சிக்கும், மாணவர்களின் உயர்வுக்கும் அர்பணிப்புடன் பாடுபட்ட தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களுக்கு ஈர நெஞ்சம் சார்பாக வாழ்த்துக்களும் ,நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன .


6 comments:

  1. எழு குழந்தைகளுக்கு அஞ்சலிகள்...

    ஈர நெஞ்சம் அமைப்பு அமைப்பிற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தனபாலன் சார்

      Delete
  2. அருமையான பதிவு சக்தி...நற்பணிகள் தொடர ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு ஏன் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அகிலா சகோதரி

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்