அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் உலகத்தில் உள்ள சகோதர ,சகோதரிகள் ,அனைத்து பதிவர் நண்பர்கள்,குடும்பத்தினர் ,,, மற்றும் நான் எழுதும் கிறுக்கல் பதிவுகளை படித்து ஆதரவு தரும் உலக வாசகர்கள் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றுமொறு முறை என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நாம் எல்லோரும் தனியாக அவர்களுக்கு உதவ இல்லங்கள் அமைக்காவிட்டாலும் அவர்களுக்கு அதரவு கொடுத்து நடத்தப்படும் இல்லங்களுக்கு உதவலாமே .அவர்களும் நம் சிறு உலகத்தில் நம்முடன் பிறந்தோர் தானே ! அவர்களும் நம் இனம் தானே மனித இனமாய் பிறந்த அவர்களுக்கு ஆதரவாய் இருப்போம் .
நமக்குஉதவமனம்இருக்கும்ஆனால்பணம்இல்லைஎன்றுநினைபவர்கள்தனியாகஉதவாமல்தன்நண்பர்களுடன்கூட்டுசேர்ந்துஒருஆளுக்கு rs:50 போட்டுஒருநல்லதொகையாகஉதவலாம் . நம் மகிழ்ச்சியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு கை கோர்த்து உண்மையான மன நிறைஉடைய ஆனந்தமாய் பண்டிகையை கொண்டாடலாம் வாங்க
(அவரவர் இல்லங்களுக்கு அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு முறை சொன்று பார்த்து வாருங்கள் பார்த்தால் நீங்களே உதவுவீர்கள் பலரை உதவும்படி கூறுவீர்கள் அவர்கள் சிரிப்பில் நாம் சிரிப்போம் )
குரங்கு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா செல்வோர் மிக்க எச்சரிக்கையாக செல்லவேண்டும் .ஏனென்றால் பாதுகாப்பு நடவடிக்கை சுத்தமாக இல்லை .
நாங்கள் குரங்கு நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தோம் .வால்பாறை மலை அடிவாரத்தில் வன இலகாவால் சுங்க வசூல் செய்யபடுகிறது .(டிக்கட் வாங்காமல் செல்வோரிடம் நீர் வீழ்ச்சி முகப்பில் வன ஊழியர்கள் சிலரால் தனி வசூல் நடக்கிறது ஜரூராக மிரட்டலுடன் நடக்கிறது ).
விடுமுறை நாட்களில் சுற்றுலா வருவோரிடம் இவ்வளவு வசூல் செய்யும் வன இலாக்கா சுற்றுலா பயணிகளின் அக்கறை பற்றி சிறிதும் அக்கறை காட்டுவதில்லை .
.மேலே படத்தில் உள்ள DANGER என்ற இடத்தில் அதிகமானோர் விழுந்து அடிபடுகிறார்கள் .எங்கள் வண்டி சாவி தொலைந்து விட்டதால் அதை தேடி முதல் நண்பர் அந்த பறையில் தேடி சென்றார் மூன்றடி வைத்திருப்பர் ஒரே வழுக்காக வழுக்கி கீழே விழ்ந்தார் .அவரை காப்பாற்ற இரண்டாம் நபர் அமர்ந்த படியே நகர்ந்து சென்றார் அவரும் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து முகமெல்லாம் ரத்தம். அவரை காக்க மூன்றாம் நண்பர் ஒரு அடி வைத்தது தான் தாமதம் அவரும் விழுந்து பறை மோதி மண்டை அடிபட்டு தாடை கிழிந்தது .கோவை வந்த பிறகு எல்லோருக்கும் தையல் போடப்பட்டது அந்த அளவு அடி .
இவ்வளவு நடக்கும் பொழுது சிறிது தள்ளி ஒரு 10 வயது சிறுமி விழுந்து உதடு கிழிந்து பல் உடைந்து ஒரே ரத்த மாயம் .
இது குரங்கு நீர் விழ்ச்சியா ரத்த நீர் விழ்ச்சியா ?என்று புரியாமல் விரைவில் இடத்தை காலி செய்தோம் .
நீர் வீழ்ச்சியில் குளிப்போரிடம் குறிப்பாக பெண்களிடம் சரக்கு ஆசாமிகள் செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை .
குளிப்போருக்கு பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள் ஒன்றும் இல்லை .மழை அடித்து சென்றதா இல்லை மனிதரால் அடித்து செல்லப்பட்டதா புரியவில்லை .
மேற்படி பாறைமுதல் நீர் வீழ்ச்சி வரை இரும்பு தடுப்பு வேலி அமைப்பது அவசர ஒன்று .
மேலும் எச்சரிக்கை பலகை ஒன்றில் வழுக்கு பாறை யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தவேண்டும் .
பெண்கள் உடை மாற்ற சுத்தமான அறை தேவை .ஏற்கனவே உள்ள அறையில் பலான சமாச்சாரங்கள் அதிகம் கிடக்கிறது .
குளிக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் முதலுதவி பெட்டி கை வசம் வைத்திருக்க வேண்டும் .
போட்டோ எடுக்கிறேன் என்று சில பேர்வழிகளால் குளிக்கும் பெண்களை பல மாடல்களில் ரசித்து படம் எடுக்க படுகிறது .
சுற்றுலா என்பது மன நிம்மதிக்காகவும் ,மகிழ்ச்சிக்காகவே தவிர பிரச்னைகள் சந்திப்பதும் .துக்கபடவும் அல்ல . சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ????????மிலியன் கேள்விகளுடன் ??????????????????
கண்ணுக்கு தெரியாமல் நண்பர்களாய், ஒரு குடும்பமாய் ,ஈகோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறி கொள்ளவும் .பாலமாய் திகழும் கணிபொறிக்கு பதியுலக சகோதரர்கள் சார்பாக எல்லா கணிப்பொறிக்கும் ஆயதபூஜை சார்பாக வணக்கங்கள் கோடான கோடி நன்றிகள்.
சென்னை தொலை தூர பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும்பாவம் செய்தவர்கள் .இவ்வளவு ஒரு கேவலமான பல்கலைகழக செயல்பாட்டை நான் சந்தித்தது இல்லை .நிர்வாகம் என்பது ஒரு எள் அளவும் கிடையாது .ஒரு முறை தேர்வு எழுதினால் result வெளியிடுவது இல்லை .அப்படியே result வெளிவரவில்லையே என்று நிர்வாகத்தினரை அணுகினால் மன்னிக்கவும் எப்படியெல்லாம் உங்களை அலைகழித்து பைத்தியம் பிடிக்க வைக்க முடியுமோ அப்படி பதில் அளிப்பார்கள் .நீங்கள் பதில் கிடைக்காமல் ஒரே தேர்வை 3 முறை 4 முறை எழுதினாலும் முடிவுகள் வெளிவராது .
தகவல் அறியும் சட்டம் வாழ்கஒரே அஸ்திரம் நீங்கள் கோடி முறை மாடி படி ஏறி இறங்கி பல அதிகாரிகளால் எட்டி உதைக்கப்பட்டு அலுத்து அழுது நிர்கதியாகி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொன்னான திட்டம் தகவல் அறியும் சட்டம் மூலம் பல முறையீடுகளுக்கு பிறகு அவர்கள் தவறை மறைக்க மழுப்பலான பதில் கொடுக்கப்பட்டு ஒருவழியாக இறுதியில் உங்களுக்கு நீங்கள் அலைந்ததற்கு விடை கிடைக்கும். இத்தனை கேவலமான சம்பவங்கள் எனக்கும் என்னை போன்ற பல மாணவர்களுக்கம் அரங்கேறுகிறது .
நிர்வாக செயல்பாட்டிற்கு ஒரு சம்பவம் கூறுகிறேன் கேளுங்கள் ஒரு முறை மேற்கண்ட பிரச்சனைக்காக இயக்குனர் அவர்களை சந்தித்து குறை கூற சென்றேன் .அப்போது இயக்குனர் உதவியாளர் ( Director to PA ) அவர்களால் தடுக்கபட்டு controller of examination அவர்களை சந்திக்க கூறினார்கள். அவரிடம் என் கேவலத்தை கூறினேன் அவரோ நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சம்மந்தப்பட்ட section-ல் அணுக சொன்னார் அங்கே சென்றால் எல்லாம் கேட்டுவிட்டு அலுவலக உதவியாளரிடம் (office assistant ) சொல்லசொன்னார்கள் அவரும் கேட்டுவிட்டு security -யிடம் சொல்ல சொன்னார் .நானோ அவரையும் சந்தித்து நடந்தவற்றை சொன்னேன் அவரோ "நீங்கள் பாவம் தம்பி நீங்கள் போய்டு வாங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் .எதுக்கும் அந்த ஆண்டவன நெனச்சு வேண்டிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்று ஆறுதல் கூறி வெளியே செல்ல கேட் இருக்குமிடத்தை கையால் காட்டினார். இப்போ சொல்லுங்க நான் பட்ட கேவலங்கள் எவ்வளவு. ? எவ்வளவு காயமான வடுக்களை ஏற்படுத்தி இருக்கும் என்று !!
பல்கலைகழக இயக்குனருக்கு சில வேண்டுகோள்கள்
1, இவ்வளவு ஒரு பொறுப்பற்ற நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பவர் யார் ? 2,பல்கலைகழகத்தில் பணியாற்றுபவர்களும் கல்லூரி படிப்பை முடித்து தானே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வார்களா?
3 , தெரியாமல் ஒரு தகவலை கேட்டோ அல்லது ஒரு வழிகாட்டலுக்காக அணுகினலோ மாணவர்களை நாயை விட கேவலமாக நடத்தும் அணுகுமுறையை மாற்றிகொள்வார்களா?
4 ,ஒரு குறைக்காக ஒருவரிடம் அது இயக்குனரிடம் இருந்தாலும் மனு கொடுக்கபட்டால் please take needful action என்று எழுதுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் அந்த மனு மேல் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது, அம்மனுவிற்க்கு தீர்வு காணப்பட்டதா ,என்று கவனிக்காமல் விடுவதே இத்துணை சிக்கலுக்கும் காரணம் .
5 ,ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு தகவல் அறியும் சட்டம் மூலம் மட்டுமே அறிய வேண்டிய நிலைக்கு யார் காரணம் ??(அங்கு பணிபுரியும் சில நல் உள்ளங்கள் " சார் நீங்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் கேளுங்கள் இல்லாவிட்டால் இவர்களிடம் மழுப்பலான பதில் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது " என்று கூறுகிறார்கள் அவ்வளவு ஒரு நிர்வாக கேவலம் ).
6 .இவர்களுடைய அலச்சிய போக்கு பல மாணவர்களுடைய வாழ்கையில் முன்னேறும் வாய்ப்பை தவற காரணமாகிவிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் .
7 , ஒவ்வொரு மாணவரும் பொருளாதாரமோ,அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ ,அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சிய கனவை கெடுக்கும் வகையில் அமைந்து விட வேண்டாம் .
8 .ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைகழகம் பற்றி மோசமான பதிவு எழுத வெட்கபடுகிறேன். இப்படி பல்கலைகழகம் தவறு செய்யும் போது யாரிடம் பல்கலைகழகம் பற்றி புகார் அளிக்க வேண்டும் என்று இந்த பதிவு படிக்கும் யாரவது தெரிந்தால் கூறவும் பயனுள்ளதாக இருக்கும் .