Oct 24, 2010

ஆழியார்குரங்குநீர் வீழ்ச்சி செல்வோர் ஜாக்கிரதை


குரங்கு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா செல்வோர் மிக்க எச்சரிக்கையாக செல்லவேண்டும் .ஏனென்றால் பாதுகாப்பு நடவடிக்கை சுத்தமாக இல்லை .

நாங்கள் குரங்கு நீர் வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றிருந்தோம் .வால்பாறை மலை அடிவாரத்தில் வன இலகாவால் சுங்க வசூல் செய்யபடுகிறது .(டிக்கட் வாங்காமல் செல்வோரிடம் நீர் வீழ்ச்சி முகப்பில் வன ஊழியர்கள் சிலரால் தனி வசூல் நடக்கிறது ஜரூராக மிரட்டலுடன் நடக்கிறது ).

விடுமுறை நாட்களில் சுற்றுலா வருவோரிடம் இவ்வளவு வசூல் செய்யும் வன இலாக்கா சுற்றுலா பயணிகளின் அக்கறை பற்றி சிறிதும் அக்கறை காட்டுவதில்லை .

.மேலே படத்தில் உள்ள DANGER என்ற இடத்தில் அதிகமானோர் விழுந்து அடிபடுகிறார்கள் .எங்கள் வண்டி சாவி தொலைந்து விட்டதால் அதை தேடி முதல் நண்பர் அந்த பறையில் தேடி சென்றார் மூன்றடி வைத்திருப்பர் ஒரே வழுக்காக வழுக்கி கீழே விழ்ந்தார் .அவரை காப்பாற்ற இரண்டாம் நபர் அமர்ந்த படியே நகர்ந்து சென்றார் அவரும் வழுக்கி விழுந்து மண்டை உடைந்து முகமெல்லாம் ரத்தம். அவரை காக்க மூன்றாம் நண்பர் ஒரு அடி வைத்தது தான் தாமதம் அவரும் விழுந்து பறை மோதி மண்டை அடிபட்டு தாடை கிழிந்தது .கோவை வந்த பிறகு எல்லோருக்கும் தையல் போடப்பட்டது அந்த அளவு அடி .

இவ்வளவு நடக்கும் பொழுது சிறிது தள்ளி ஒரு 10 வயது சிறுமி விழுந்து உதடு கிழிந்து பல் உடைந்து ஒரே ரத்த மாயம் .

இது குரங்கு நீர் விழ்ச்சியா ரத்த நீர் விழ்ச்சியா ?என்று புரியாமல் விரைவில் இடத்தை காலி செய்தோம் .

 • நீர் வீழ்ச்சியில் குளிப்போரிடம் குறிப்பாக பெண்களிடம் சரக்கு ஆசாமிகள் செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமில்லை .
 • குளிப்போருக்கு பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள் ஒன்றும் இல்லை .மழை அடித்து சென்றதா இல்லை மனிதரால் அடித்து செல்லப்பட்டதா புரியவில்லை .
 • மேற்படி பாறைமுதல் நீர் வீழ்ச்சி வரை இரும்பு தடுப்பு வேலி அமைப்பது அவசர ஒன்று .
 • மேலும் எச்சரிக்கை பலகை ஒன்றில் வழுக்கு பாறை யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தவேண்டும் .
 • பெண்கள் உடை மாற்ற சுத்தமான அறை தேவை .ஏற்கனவே உள்ள அறையில் பலான சமாச்சாரங்கள் அதிகம் கிடக்கிறது .
 • குளிக்கும் இடத்தில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் முதலுதவி பெட்டி கை வசம் வைத்திருக்க வேண்டும் .
 • போட்டோ எடுக்கிறேன் என்று சில பேர்வழிகளால் குளிக்கும் பெண்களை பல மாடல்களில் ரசித்து படம் எடுக்க படுகிறது .
சுற்றுலா என்பது மன நிம்மதிக்காகவும் ,மகிழ்ச்சிக்காகவே தவிர பிரச்னைகள் சந்திப்பதும் .துக்கபடவும் அல்ல .
சம்மந்த பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ????????மிலியன் கேள்விகளுடன் ??????????????????

12 comments:

 1. நல்லவேளை - நான் கோவை சென்றிருந்த சமயம் நேரமின்மையால் அங்கு செல்லவில்லை...எல்லாம் நல்லதற்கே...தகவலுக்கு நன்றி...
  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 2. அன்புள்ள வேலன் சார் .
  வாங்க .குரங்கு நீர் வீழ்ச்சியில் பசங்களுடன் சென்றால் பிரச்சினை இல்லை .குடும்பத்துடன் சென்றால் கவனம் மற்றும் பாதுகாப்பு மிக அவசியம்.குரங்கு நீர் வீழ்ச்சி அருமையான இடம் .ஆழியார் அணையின் ஆனந்த அழகை ரசிக்கலாம் .தண்ணீர் விழும் இடம் மட்டும் கவனமாக நின்று குளிக்கலாம் .பாறைகளில் கால் வைத்தால் முகத்தில் மார்க் விழும் .

  ReplyDelete
 3. Neengal solvadhu unmaithaan idhe nilai kuraalathilum enakku nerndhadhu, kudumbathinarudan senren pengalai thagaadha vaarthaigalaal vimarsikkum kumbalai kaavalar gavaikkadhadhu pola nadanthu kondadhum manadhil valiyai erpaduthiyadhu.( vimal )

  ReplyDelete
 4. வாங்க விமல் ,
  நீங்கள் சொல்வது உண்மை .பெண்களை விமர்சிக்கும் கும்பல் அவர்கள் வீட்டு பெண்களுடன் வரும்போது வேறு யாரவது கிண்டல் செய்தல் ."நாங்கள் எங்கு போனாலும் இப்படி தான் கிண்டல் செய்வோம் அதனால் எங்கள் வீட்டு பெண்களிடம் நீங்கள் கிணடல் செய்தால் எனக்கு சந்தோசம் என்று கூறுவார்களா". இதை எல்லோரும் சிந்திக்க வேண்டும் .பொது இடங்களில் அத்துமீறி விமர்சனம் செய்யும் போது தான் பிரச்சனையும் சங்கடங்களும் வருகிறது நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 5. தேவையான தகவல்... படத்துடம் விளக்கம் அருமை

  ReplyDelete
 6. "தேவையான தகவல்... படத்துடம் விளக்கம் அருமை"

  வருகைக்கு நன்றி ஞானா .
  குரங்கு நீர் வீழ்ச்சியில் நடந்த சம்பவம் "முடியல வலிக்குது ,அழுதுருவேன் " அப்படி ஆய்டுச்சு
  ஹா,ஹா, ஹா
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 7. arumai thagavalukku nandri

  chandhrakumar

  ReplyDelete
 8. வாங்க சந்த்ரன்னா,
  வலை பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு
  நட்புடன்,
  கோவை சக்தி

  ReplyDelete
 9. நல்ல பதிவு சக்தி.. ! அப்படியே உங்க சிறுவாணி, வெள்ளிங்கிரி மலை பற்றியும் ஒரு பதிவப்போடுங்க.... !

  ReplyDelete
 10. வணக்கம் தங்கம் ,
  நல்ல யோசனை .கண்டிப்பா சிறுவாணி,வெள்ளிங்கிரி பற்றி எழுதறேன் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 11. Sakthi How are you - Maheswaran

  ReplyDelete
 12. வணக்கம் மகேஷ் ,
  நலம் ?நீங்க மற்ற எல்லோரும் நலமா ? அடிக்கடி வாங்க !
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்