Oct 26, 2010

வாங்க தீபாவளி கொண்டாடலாம்
அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் உலகத்தில் உள்ள சகோதர ,சகோதரிகள் ,அனைத்து பதிவர் நண்பர்கள்,குடும்பத்தினர் ,,, மற்றும் நான் எழுதும் கிறுக்கல் பதிவுகளை படித்து ஆதரவு தரும் உலக வாசகர்கள் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றுமொறு முறை என் இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நாம் எல்லோரும் தீபாவளி அன்று புதிய பட்டு ஆடை உடுத்தி நல்ல அறுசுவை உணவு உண்டு மகிழ்ச்சியாக கோலாகலமாக கொண்டாடும் வேலையில் நமக்கு நம் குடும்பத்தை தவிர நம் உடனேயே வாழும் எத்தனையோ ஆதரவற்றோர் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவு அற்ற முதியோர் ,மற்றும் ஆதரவு அற்ற குழந்தைகள் ,மனநிலை பாதிக்கபட்டோர் வருடம் முழுவதும் உடுத்த துணிக்காகவும்,ஒரு வேளை நல்ல உணவுக்காவும் நம் ஆதரவை எதிர் பார்த்து காத்து இருகின்றனர் .


நாம் எல்லோரும் தனியாக அவர்களுக்கு உதவ இல்லங்கள் அமைக்காவிட்டாலும் அவர்களுக்கு அதரவு கொடுத்து நடத்தப்படும் இல்லங்களுக்கு உதவலாமே .அவர்களும் நம் சிறு உலகத்தில் நம்முடன் பிறந்தோர் தானே ! அவர்களும் நம் இனம் தானே மனித இனமாய் பிறந்த அவர்களுக்கு ஆதரவாய் இருப்போம் .

நமக்கு உதவ மனம் இருக்கும் ஆனால் பணம் இல்லை என்று நினைபவர்கள் தனியாக உதவாமல் தன் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து ஒரு ஆளுக்கு rs:50 போட்டு ஒரு நல்ல தொகையாக உதவலாம் .
நம் மகிழ்ச்சியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு கை கோர்த்து உண்மையான மன நிறைஉடைய ஆனந்தமாய் பண்டிகையை கொண்டாடலாம் வாங்க
(அவரவர் இல்லங்களுக்கு அருகில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒரு முறை சொன்று பார்த்து வாருங்கள் பார்த்தால் நீங்களே உதவுவீர்கள் பலரை உதவும்படி கூறுவீர்கள் அவர்கள் சிரிப்பில் நாம் சிரிப்போம் )9 comments:

 1. நண்பரே நானும் இதனை பற்றி பதிவிட்டுள்ளேன்.

  http://iravuvaanam.blogspot.com/2010/10/blog-post_23.html

  ReplyDelete
 2. வாங்க நண்பரே வணக்கம் ,
  வாழ்த்துக்கள் .இப்படி பட்ட பதிவுகள் அவசியம் தேவை
  நட்புடன்,
  கோவை சக்தி

  ReplyDelete
 3. Good sakthi sir,

  i appreciate your motive towards helping..varavaerka pada vaediya vishayam..but i would like to tell one thing that is many people nowadays mostly in IT fields..go out abroad leaving old parents..in this case..most of them earn money..give to old age home and sit relaxed that they have done their part..but instead..each one of us excluding some exceptionals, should first look after our own parents.. If every one started doing this, there will be a speakable decrease in the no of orphanage home...Earing money alone is not life..Lets join hands for a strong support to decrease the no of homes and EYENDRAVARAI UTHAVUNGAL..

  ReplyDelete
 4. என் உயிரில் கலந்த அன்பு மனைவியே வாங்க ,
  முதல முறையாக என் பதிவை படித்து கருத்து போட்டு இருக்கீங்க .நன்றி .
  go out abroad leaving old parents..in this case..most of them earn money..give to old age home and sit relaxed that they have done their part..but instead..each one of us excluding some exceptional,
  நீங்க கூறி இருப்பது சரியான வார்த்தை இன்றைய சில இளைஞர்கள் பணம் அதிகமாக சம்பாதிப்பதால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வயதான பெற்றோரை இல்லங்களில் சேர்த்து விட்டு "நாங்கள் தான் மாதமானால் பணம் அனுபறோமே அப்புறம் வேற என்ன செய்வார்களாம் " என்று கூலாக பதில் கூறுவதை தவிர்த்து கை பிடுத்து நடை பழக்கி கொடுத்த முதிர்ந்த கைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டாமா ????? .
  should first look after our own parents.. If every one started doing this, there will be a speakable decrease in the no of orphanage home...
  ஒவ்வொருவரும் தன்னுடைய பொறுப்பை கடமையை உணர்ந்தால் நிச்சயம் முதியோர் இல்லங்கள் பெருகுவதை குறைக்க முடியும் .
  money alone is not life..Lets join hands for a strong support to decrease the no of homes and EYENDRAVARAI UTHAVUNGAL.
  கண்டிப்பாக பணம் மட்டுமே வாழ்கை அல்ல .பணம் என்பது மன நிறைவற்றது ..பிறருக்கு உதவுவதில் உள்ள ஒரு பேரின்பம் வேறு எதிலும் கிடைக்காது .
  இணைந்த கைகளை நம்மால் இயன்ற வரை சமூகத்திற்கு உதவலாம் .
  மன நிறைவுடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 5. நல்ல கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் சக்தி. நானும் கண்டிப்பாக செய்கிறேன் . வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நன்றி தங்கம் ,
  மற்றோருக்கு உதவுவது ஒவ்வொருவரும் தங்கள் கடமையாக கண்டிப்பாக செய்ய வேண்டும் .உதவுவதில் உங்கள் நண்பர்களையும் உடன் சேர்த்துகொள்ளுங்கள் .அப்போது தான் அவர்களுக்கும் உதவும் மனப்பான்மை வளரும் .
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 7. கண்டிப்பாக உங்களைபோன்றவர்கள் உள்ளவரை
  மனிதநேயம் வளரும் வாழும்.... நம்பிக்கையுடன் ரகு..!

  ReplyDelete
 8. அன்புள்ள ரகு ,
  கண்டிப்பாக நம்மை போன்றவர்கள் உள்ளவரை
  மனிதநேயம் வளரும் வாழும்.... நம்பிக்கையுடன் ரகு..!
  joined hands do big
  தொடர்ந்து நம்ம ப்ளாக் பக்கம் வாங்க
  நட்புடன்,
  கோவை சக்தி

  ReplyDelete
 9. Do you have any video of that? I'd love to find out more details.


  Take a look at my blog; offer good connection - en.wikipedia.org -

  ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்