Jul 1, 2012

பங்கு வர்த்தகம் மலர் -82

நண்பர்களே வணக்கம் ,


தேசிய NIFTY JULY (FUTURE) உயர்ந்து   முடிவடைந்தது . நேற்று 5215.30 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5309.75 வரை உயர்ந்தது 5215.30 வரை கீழே சென்று 5297.35 ல் முடிவடைந்தது.


  • கடந்த வாரம் உலக வர்த்த சந்தைகளில் சாதகமான சூழ்நிலை நிலவியதால் தொய்வுடன் காணப்பட்ட நம் சந்தை சற்று உற்சாகமடைந்துள்ளது .
  • உலக சந்தையில் கச்சா எண்ணை,தங்கம் ,உள்ளிட்ட பல்வேறு விலை பொருட்களின் சரிந்துள்ளது வரவேற்கத்தக்கது .இதனால் நம் இறக்குமதி   செலவீனம் 12.3 % சரிவடையும் என்று தரகுறியீட்டு நிறுவம் "  இக்ரா " அறிவித்துள்ளது .
  • கடந்த 17 ஆண்டுகளாக இல்லாத அளவு சரிந்த அமெரிக்க  டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சற்று மீண்டு ரூ .55 .64 ஆக இருந்தது .
  • அமெரிக்க  டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துவருவதால் நம் நாட்டின் பணவீக்கம் குறைந்து வருவது நம் பங்கு சந்தை     நோக்கி பயணிக்க உறுதுணையாக இருக்கும் . 
  • கடந்த நிதியாண்டில் 112 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணை 90-90 டாலராக குறைந்துள்ளது .இதனால் நம் நாட்டில் பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது .
  • மேலும் கச்சா எண்ணை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி செலவீனம் குறைவதால் நாட்டில் வர்த்தகம் ,நடப்பு கணக்கு பற்றாகுறை ,குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக சந்தை வல்லுனர்கள் தெரிவிகின்றனர் .
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வர்த்தகத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுகுறித்து  இந்தோனேசிய தூதர் தெர்வித்துள்ள அறிக்கையில் ,இந்தியாவில் அடிப்படை கட்டமைப்பு ,கல்வி ,வர்த்தகம் ,தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதால் இந்த துறைகளில் இந்தியாவோடு இணைந்து செயல்பட  திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .
  • கடந்த வாரம் உலக சந்தைகளின் சாதகத்தை தொடர்ந்து அந்நிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தையில் சிறிதளவு முதலீட்டை மேற்கொண்டுள்ளனர் .
  • ஐரோப்பிய நாடுகளின் முடிவடைந்த  கூட்டு கூட்டத்தில் கடன் பிரச்னை ,பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தவித்த நாடுகளுக்கு முழு அளவில் நிதி உதவி அளிப்பதென்று முடிவு எட்டப்பட்டுள்ளது . இது பற்றி  பல முறை நம் பதிவுகளில்  குறிப்பிட்டுள்ளோம்  , மேற்கண்ட முடிவு மகிழ்ச்சிகரமானதாகவும் ,சந்தைக்கு சாதகமானதாக இருக்கும் .
  • ஜூலை மாத 3 ம் வாரத்தில் நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் வெளிவர உள்ளன இதுவும் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் .
  • தென்மேற்கு பருவ நிலை எதிர்பார்த்த அளவை விட இந்த ஆண்டு சற்று குறைவாகவே உள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5306 STAYED ABOVE 5323 TARGETS ,,5340 ,,5357,5379,,

THEN 5404,,5428,,,

SUPPORT LEVELS 5265,,5250 .,,,


SELL BELOW 5240 STAYED WITH VOLUME -5230,TARGETS 5215, 5204,5190,,,,,


THEN 5175,,5154,,,



DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது









2 comments:

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்