Jan 4, 2013

அரசு அறிவிப்பு வெளியீடு :திறந்தவெளி பட்டபடிப்பில் +2 விற்கு இணையான கல்வி தகுதிகள்



நண்பர்களே ,

 தொலைதூர கல்வியில் பிளஸ் 2 படிக்காமல் திறந்தவெளி தொலைதூர கல்வியில் பட்டபடிப்பு முடித்தால்  அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்புடையதல்ல என்ற நிலை இருந்தது .இதற்கு மாற்றாக அரசு சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது .

இதன் அடிப்படையில் கீழ்வரும் கல்வி தகுதிகள் பிளஸ் 2 விற்கு இணையாக அல்லது மாற்றாக கருதப்பட்டு திறந்தவெளி தொலைதூர கல்வியில் இளங்கலை பட்டபடிப்பு முடித்தவர்களுக்கும் , பொது பணிகளில் அரசு வேலை வாய்ப்பும்,ஏற்கனவே பதவிகளில் உள்ளோருக்கு  பதவி உயர்வு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது .



  • 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று  ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த  பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு               ( 10+3+3 ).

  • 11 ம் வகுப்பிற்கு பின் இரண்டு ஆண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்பு முடித்த பின்  திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு          ( 11+2+3 ).

  • 10 ம் வகுப்பிற்கு பின் இரண்டு  ஆண்டு  ITI ( INDUSTRIAL TRAINING INSTITUTE ) படிப்பு முடித்த  பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு           ( 10+2+3 ).

  • 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று  ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த  பின் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாண்டு  ஆண்டு திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு           ( 10+3+2 ).

அரசு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதிபெற்றவர்கள் ,இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள் .

தின மலர் நாளிதழில் வந்த அரசு அறிவிப்பு இந்த விளம்பரத்தை சேமித்து வைத்து கொள்ளவும் .




நன்றி :தின மலர் நாளிதழ் கோவை பதிப்பு 


9 comments:

  1. very useful information . thanks sir

    ReplyDelete
    Replies
    1. Welcome and thanks for your comment Mr.senthil.

      Delete
  2. பயனுள்ள செய்தி நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க !

      Delete
  3. பயனுள்ள பகிர்வு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோதரி வணக்கம் ,
      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்