Oct 5, 2010

சென்னை தொலை தூர பல்கலைகழகமா ? கேவல பல்கலைகழகமா????



சென்னை தொலை தூர பல்கலைகழகத்தில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாவம் செய்தவர்கள் .இவ்வளவு ஒரு கேவலமான பல்கலைகழக செயல்பாட்டை நான் சந்தித்தது இல்லை .நிர்வாகம் என்பது ஒரு எள் அளவும் கிடையாது .ஒரு முறை தேர்வு எழுதினால் result வெளியிடுவது இல்லை .அப்படியே result வெளிவரவில்லையே என்று நிர்வாகத்தினரை அணுகினால் மன்னிக்கவும் எப்படியெல்லாம் உங்களை அலைகழித்து பைத்தியம் பிடிக்க வைக்க முடியுமோ அப்படி பதில் அளிப்பார்கள் .நீங்கள் பதில் கிடைக்காமல் ஒரே தேர்வை 3 முறை 4 முறை எழுதினாலும் முடிவுகள் வெளிவராது .

தகவல் அறியும் சட்டம் வாழ்க ஒரே அஸ்திரம்
நீங்கள் கோடி முறை மாடி படி ஏறி இறங்கி பல அதிகாரிகளால் எட்டி உதைக்கப்பட்டு அலுத்து அழுது நிர்கதியாகி மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொன்னான திட்டம் தகவல் அறியும் சட்டம் மூலம் பல முறையீடுகளுக்கு பிறகு அவர்கள் தவறை மறைக்க மழுப்பலான பதில் கொடுக்கப்பட்டு ஒருவழியாக இறுதியில் உங்களுக்கு நீங்கள் அலைந்ததற்கு விடை கிடைக்கும்.
இத்தனை கேவலமான சம்பவங்கள் எனக்கும் என்னை போன்ற பல மாணவர்களுக்கம் அரங்கேறுகிறது .


நிர்வாக செயல்பாட்டிற்கு ஒரு சம்பவம் கூறுகிறேன் கேளுங்கள்
ஒரு முறை மேற்கண்ட பிரச்சனைக்காக இயக்குனர் அவர்களை சந்தித்து குறை கூற சென்றேன் .அப்போது இயக்குனர் உதவியாளர் ( Director to PA ) அவர்களால் தடுக்கபட்டு controller of examination அவர்களை சந்திக்க கூறினார்கள்.
அவரிடம் என் கேவலத்தை கூறினேன் அவரோ நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சம்மந்தப்பட்ட section-ல் அணுக சொன்னார் அங்கே சென்றால் எல்லாம் கேட்டுவிட்டு அலுவலக உதவியாளரிடம் (office assistant ) சொல்லசொன்னார்கள் அவரும் கேட்டுவிட்டு security -யிடம் சொல்ல சொன்னார் .நானோ அவரையும் சந்தித்து நடந்தவற்றை சொன்னேன் அவரோ "நீங்கள் பாவம் தம்பி நீங்கள் போய்டு வாங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் .எதுக்கும் அந்த ஆண்டவன நெனச்சு வேண்டிக்குங்க எல்லாம் சரியாயிடும் என்று ஆறுதல் கூறி வெளியே செல்ல கேட் இருக்குமிடத்தை கையால் காட்டினார்.
இப்போ சொல்லுங்க நான் பட்ட கேவலங்கள் எவ்வளவு. ? எவ்வளவு காயமான வடுக்களை ஏற்படுத்தி இருக்கும் என்று !!


பல்கலைகழக இயக்குனருக்கு சில வேண்டுகோள்கள்


1, இவ்வளவு ஒரு பொறுப்பற்ற நிர்வாகத்திற்கு பொறுப்பேற்பவர் யார் ?
2,பல்கலைகழகத்தில் பணியாற்றுபவர்களும் கல்லூரி படிப்பை முடித்து தானே வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்வார்களா?

3 , தெரியாமல் ஒரு தகவலை கேட்டோ அல்லது ஒரு வழிகாட்டலுக்காக அணுகினலோ மாணவர்களை நாயை விட கேவலமாக நடத்தும் அணுகுமுறையை மாற்றிகொள்வார்களா?

4 ,ஒரு குறைக்காக ஒருவரிடம் அது இயக்குனரிடம் இருந்தாலும் மனு கொடுக்கபட்டால் please take needful action என்று எழுதுவதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் அந்த மனு மேல் என்ன நடவடிக்கை எடுக்கபட்டது, அம்மனுவிற்க்கு தீர்வு காணப்பட்டதா ,என்று கவனிக்காமல் விடுவதே இத்துணை சிக்கலுக்கும் காரணம் .

5 ,ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தீர்வு தகவல் அறியும் சட்டம் மூலம் மட்டுமே அறிய வேண்டிய நிலைக்கு யார் காரணம் ??(அங்கு பணிபுரியும் சில நல் உள்ளங்கள் " சார் நீங்கள்
தகவல் அறியும் சட்டம் மூலம் கேளுங்கள் இல்லாவிட்டால் இவர்களிடம் மழுப்பலான பதில் தவிர வேறு ஒன்றும் கிடைக்காது " என்று கூறுகிறார்கள் அவ்வளவு ஒரு நிர்வாக கேவலம் ).

6 .இவர்களுடைய அலச்சிய போக்கு பல மாணவர்களுடைய வாழ்கையில் முன்னேறும் வாய்ப்பை தவற காரணமாகிவிடுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்
.

7 , ஒவ்வொரு மாணவரும் பொருளாதாரமோ,அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாகவோ ,அவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற லட்சிய கனவை கெடுக்கும் வகையில் அமைந்து விட வேண்டாம் .

8 .ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து பெற்ற தமிழகத்தை சேர்ந்த பல்கலைகழகம் பற்றி மோசமான பதிவு எழுத வெட்கபடுகிறேன்.

இப்படி பல்கலைகழகம் தவறு செய்யும் போது யாரிடம்
பல்கலைகழகம் பற்றி
புகார் அளிக்க வேண்டும் என்று இந்த பதிவு படிக்கும் யாரவது தெரிந்தால் கூறவும் பயனுள்ளதாக இருக்கும் .

9 comments:

  1. நண்பா,... உங்களின் ஆதங்கமும் வலிகளும் என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது.... சம்பந்தப்பட்டவர்கள் கண்களில் பட்டால் நல்லது. அப்படியே பட்டாலும்...... ம்ம்ம்ம் ஒன்றும் பெரிதாக நடந்துவிட பொவட்குமில்லை... அப்போ இப்படியே தானா? என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  2. அன்புள்ள நண்பர் ஞானம் ,
    வாருங்கள் .இவர்களை போன்ற அதிகாரிகள் தங்களது பணியை ,கடமையை ,ஒவ்வொருவரும் சரியாக செய்தால் உண்மையான வல்லரசு நாடக இந்தியா மாறும் என்பதில் ஐயமில்லை .ஆனால் இவர்கள் திருந்தமாட்டார்கள். இந்த பதிவின் மூலம் யாரேனும் ஒரு அதிகாரி தன்னை திருத்திக்கொண்டால் அதுவே மிக பெரிய வெற்றியாகும் .
    நட்புடன்,
    கோவைசக்தி,,

    ReplyDelete
  3. தங்கள் தளத்தில் உள்ள எழுத்துக்கள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது டெம்ப்ளேட் மாற்றி கொள்ளவும்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சசி ,
    வேறு ஏதேனும் மாற்றம் இருப்பின் கூறவும் .திருத்திகொள்கிறேன் .
    நன்றியுடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. ஆதங்கமான கருத்துக்கள் சக்தி. . ! என்ன செய்வது நாம் இருப்பது தமிழ் நாட்டில் அல்லவா ? ... அப்புறம் உங்கம் தளத்தில் நெறைய மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளது.தளத்தில் உள்ள எழுத்துக்கள் படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது டெம்ப்ளேட் மாற்றி கொள்ளவும்.

    ReplyDelete
  7. word verification நீக்கவும்.

    ReplyDelete
  8. மாஸ்டர் நாம இந்தியாவில் இருக்கிறோம் என்பதை நீங்க அடிகடி மறந்து போயிடுறீங்க.. இங்க நடப்பது ஜனநாயக ஆட்சி என்றால் நமக்கும் நீதி கிடைக்கும். இந்த பணநாயக ஆட்சியில் மனிதர்களுக்கு எங்கே மரியாதை.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி சிம்பா ,
    இது மிக கேவலமான பல்கலைகழகம் .தயவு செய்து யாரும் தொலை தூர கல்வியில் சேரவேண்டாம் .
    பயத்துடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்